Published:Updated:

`அக்கவுன்ட்ல மோடி பணம் போட்டார்னு நெனச்சுட்டேன்!' - வங்கி அதிகாரிகளை அதிரவைத்த இளைஞர்

நிலம் வாங்க முடிவு செய்த பணத்தை எடுக்க வங்கிக்குச் சென்றபோது 80,000-க்கும் அதிகமான பணம் மாயமாகி இருந்தது.

ஹூக்கும் சிங்
ஹூக்கும் சிங்

மத்தியப் பிரதேசம் மாநிலம் ரெளனி பகுதியைச் சேர்ந்தவர் ஹூக்கும் சிங். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஹூக்கும் சிங்கின் வங்கிக் கணக்கில் யாரோ தொடர்ந்து பணம் டெபாசிட் செய்து வந்துள்ளனர். மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை இவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆனது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் ஹூக்கும் சிங் தெரிவிக்கவில்லை. தனக்கு வந்த பணத்தை தாராளமாக செலவு செய்து வந்துள்ளார்.

SBI ATM
SBI ATM

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹுக்கும் சிங் என்ற மற்றொரு நபர் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 80,000-க்கும் அதிகமாக தொகை எடுக்கப்பட்டதாக வங்கியில் புகார் தெரிவித்துள்ளார். இவரும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இவரது புகாரையடுத்து வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ரெளனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் எடுத்தது தெரியவந்தது. ஆனால், இது அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்த தவறு எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

80 லட்சம் டெபாசிட்... 45 ஆயிரம் வாடகை! - தேனியை மிரளவைத்த செல்போன் டவர் மோசடி

இரண்டு நபர்களின் பெயரும் ஹூக்கும் சிங்தான். இவர்கள் வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இதைக்கூட சரியாக கவனிக்காத வங்கி அதிகாரிகள் இருவருக்கும் ஒரே சேமிப்புக் கணக்கைத் தொடங்கியுள்ளனர். அதற்கான வங்கி பாஸ்புக் மட்டும் ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றையும் அளித்தனர். ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் வேலை தேடி ஹரியானாவுக்குச் சென்றுவிட்டார். அங்கு தான் சம்பாதித்த பணத்தை ஆலம்பூர் ஸ்டேட் வங்கிக் கிளையின் மூலம் டெபாசிட் செய்துவந்துள்ளார். அந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை மற்றொரு ஹூக்கும் சிங் எடுத்து செலவு செய்துள்ளார். ஒரே கணக்கில் இந்தச் செயல்பாடுகள் நடந்ததால் வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் எழவில்லை.

ஸ்டேட்மென்ட்
ஸ்டேட்மென்ட்

இந்த நிலையில்தான், ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் நிலம் வாங்குவதற்காக தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய அக்கவுன்டில் இருந்து 80,000-க்கும் அதிகமான தொகை எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில்தான் இந்தக் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

``45 நாள்ல காலிபண்ணுங்க, இது உங்க வீடு அல்ல!“- வங்கி ஏல நோட்டீஸால் பதறிய பெண்; அம்பலமான மோசடி

இதையடுத்து, ரெளனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங்கிடம் அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால், அதற்கு அவர் அளித்த பதிலோ அல்டிமேட் ரகம். ``பிரதமர் மோடி எனக்கு பணம் அளித்தாக எண்ணினேன். இதில் வேறு எந்தக் காரணமும் இல்லை. அதை எடுத்துதான் செலவு செய்தேன். நான் கடினமாக உழைக்கிறேன். என்னால் பணத்தைச் சேமிக்க முடியவில்லை. என்னிடம் பணம் இல்லை. எனக்கு அது தேவைப்பட்டது” என்றார்.

ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங்
ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங்

ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் பேசுகையில், ``நான் 2016-ல் இருந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கிறேன். சிறுகச் சிறுக சேர்த்து 1,40,000 ரூபாய் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்தேன். நிலம் வாங்க முடிவு செய்த பணத்தை எடுக்க வங்கிக்குச் சென்ற போது 80,000-க்கும் அதிகமான பணம் மாயமாகி இருந்தது” என்றார்.