Published:Updated:

ஃபாஸ்டேக் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி அதிகரிப்பு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

ஃபாஸ்டேக்

கடந்த வருட இறுதியில் `ஃபாஸ்டேக்’ மூலம் ரூ.3,679 கோடி வரை நாடு முழுவதும் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

ஃபாஸ்டேக் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி அதிகரிப்பு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

கடந்த வருட இறுதியில் `ஃபாஸ்டேக்’ மூலம் ரூ.3,679 கோடி வரை நாடு முழுவதும் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
ஃபாஸ்டேக்

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில், ஃபாஸ்டேக் என்னும் திட்டம் அமல்படுத்தப்பட்டு அதன் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வருட இறுதியில் `ஃபாஸ்டேக்’ மூலம் ரூ.3,679 கோடி வரை நாடு முழுவதும் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஃபாஸ்டேக் மூலம் ரூ.119 கோடி வசூலிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாகப் பேசுகையில், ``2021-2022 நிதியாண்டில் அரசுக்கு ஃபாஸ்டேக் மூலம் ரூ.26,622,93 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. 2021-2022-ம் நிதியாண்டில் ஃபாஸ்டேக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தரவுகளில் பதிவு செய்யப்படும் போது வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் டிஜிட்டல் ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது. 2022 ஜனவரி 31 வரை நாடு முழுவதும் 4.59 கோடி டிஜிட்டல் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism