Published:Updated:

தங்கம் கையிருப்புப் பட்டியல் - முன்னேறிய இந்தியா; முதலிடத்தில் அமெரிக்கா

செ.கார்த்திகேயன்

ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயம் செய்யும் காரணிகளில் தங்கம் முக்கிய இடத்தில் இருப்பதால், உலக நாடுகள் தங்கம் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

கட்டித் தங்கம்
கட்டித் தங்கம்

இன்றைய நிலையில் உலக அளவில் தங்கத்துக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலையும் கடுமையான ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயம் செய்யும் காரணிகளில் தங்கம் முக்கிய இடத்தில் இருப்பதால், இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளும் தங்கம் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும், ஒவ்வொரு நாடும், அவர்களின் தலைமை வங்கியில் உள்ள தங்கத்தின் இருப்புக்கு ஏற்ப, பணத்தைப் புழக்கத்தில் விடுவதால், தங்கத்தை அதிகமாக இருப்பு வைத்துக் கொள்வதில் அனைத்து நாடுகளுக்கு இடையே போட்டி வலுத்துக் காணப்படுகிறது.

Bar Gold
Bar Gold

உலக அளவில் இன்று தங்கத்தை அதிகமாக இருப்பு வைத்துள்ள நாடு அமெரிக்கா. உலக தங்க கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட உத்தேச மதிப்பு பட்டியலின்படி அமெரிக்கா 8,133.5 டன் தங்கத்தை இருப்பு வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனி அதிக அளவு தங்கத்தை வைத்துள்ளது. ஜெர்மனி நாட்டின் தங்க இருப்பு 3367.8 டன்.

இந்த இரு நாடுகளைத் தொடர்ந்து, இத்தாலி 2,451.8 டன், பிரான்ஸ் 2,436.1 டன், ரஷியா 2,207 டன், சீனா 1,926.5 டன், சுவிட்சர்லாந்து 1,040 டன், ஜப்பான் 7,65.2 டன், இந்தியா 618.2 டன், நெதர்லாந்து 612.5 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.

தங்கம் இருப்புப் பட்டியலில் இந்தியா 9-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு முன்பு 10-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.