Published:Updated:

`மோஸ்ட் வான்டட்... பல மணி நேரம் நீடித்த என்கவுன்டர்!’ - காஷ்மீரில் கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதி

காஷ்மீர்
காஷ்மீர்

ஜுனைத், பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி. இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் டிவிஷ்னல் கமாண்டராக மத்திய காஷ்மீர் பகுதியைக் கவனித்து வருகிறார்

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான யுத்தம் நடைபெறும் இந்த வேளையிலும், காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துதான் காணப்படுகிறது. இதனால் கொரோனா காலத்திலும் காஷ்மீரில் ராணுவம் ஹை-அலர்ட்டில்தான் இருக்கிறது.

காஷ்மீர் எல்லை காக்கும் பணியில் வீரர்கள்
காஷ்மீர் எல்லை காக்கும் பணியில் வீரர்கள்

தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரும் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவலர்கள், தீவிரவாதிகளின் இருப்பிடங்களை முன்கூட்டியே அறிந்து, அவர்களின் செயல்பாடுகளைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நாச செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு ராணுவம் தக்க பதிலடியைக் கொடுத்து வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீநகரில் சில தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தது ராணுவம் மற்றும் காவலர்கள் அடங்கிய குழு. அதிகாலை முதலே தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. தொடர்ந்து பல பணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்கள் காயமடைந்தனர். இந்த என்கவுன்டரில் அவர்களிடம் இருந்து பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

ஜுனைத் செஹ்ராய்
ஜுனைத் செஹ்ராய்
Twitter

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் டெஹ்ரீக் - இ - ஹரியாட் இயக்கத்தின் தலைவரான அஷ்ரஃப் செஹ்ராய் என்பவரின் இளைய மகன் ஜுனைத் செஹ்ராய் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இவர் 2018-ம் ஆண்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார்.

``தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின்போது 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஜுனைத். இவர் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி. இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் டிவிஷ்னல் கமாண்டராக மத்திய காஷ்மீர் பகுதியைக் கவனித்து வருகிறார்” என்றார். காஷ்மீரில் வான்டெட் தீவிரவாதி ஒருவர் சுட்டுகொல்லப்பட்ட விவகாரம் பாதுகாப்பு படைக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட மாற்றொரு தீவிரவாதி தாரிக் அகமது. புல்வாமா பகுதியைச் சேர்ந்த இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம்தான் இணைந்ததாக டிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் நைகூ என்ற பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தீவிரவாதி ரியாஸ் நைகூவைப் போட்டுக்கொடுத்த புதுக்கும்பல்... பழி தீர்த்த ராணுவம்!
அடுத்த கட்டுரைக்கு