Published:Updated:

வெள்ளத்துக்குப் பின் மீண்டும் உயிர்பெற்ற கேரளா சுற்றுலா!

Kerala Tourism

2019-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், சென்ற ஆண்டைவிடச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14.81 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

வெள்ளத்துக்குப் பின் மீண்டும் உயிர்பெற்ற கேரளா சுற்றுலா!

2019-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், சென்ற ஆண்டைவிடச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14.81 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Published:Updated:
Kerala Tourism

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில், 6,39,271 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். 2019-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதாவது 47,73,739 சுற்றுலாப் பயணிகள் கேரளாவின் இயற்கை அழகை ரசித்துள்ளனர்.

Kerala Boat House
Kerala Boat House

கேரளாவின் 14 மாவட்டங்களில், எர்ணாகுளம் 1.57 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இடுக்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. 1.31 லட்சம் பேர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்குப் பிறகு, எதிர்மறையான வரவேற்பையே கேரளா பெற்றுவந்தது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது காலாண்டில் வெளிநாட்டிலிருந்து 1,82,320 பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரள சுற்றுலா அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், "உள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கக் காரணம், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய மாநில அரசு விரைவாக மேற்கொண்ட நடவடிக்கைகள்தான். அதோடு, கடுமையான போட்டிகள் நிறைந்த சுற்றுலா சந்தைகளில், சில ஆக்கிரமிப்பு தந்திரங்களையும் பயன்படுத்தினோம். அதன் முடிவைத்தான் தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்றார்.

`உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018-ம் ஆண்டின் இறுதியிலேயே இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால், 2019 முதல் காலாண்டின் (ஜனவரி-மார்ச்) இறுதிவரை, சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. அந்த நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் பயத்தைப் போக்க, கேரள சுற்றுலாத்துறை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன!
கேரள சுற்றுலாத்துறை செயலாளர் ராணி ஜார்ஜ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுற்றுலாத்துறை இயக்குநர் பி.பாலகிரண், "கேரள டூரிஸம், தொலைதூரத்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பல்வேறு வகையான புதுமைகளைச் சேர்த்துள்ளது. நாங்கள் இப்போது அட்வென்ச்சர் மற்றும் பருவமழை சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்" என்றார்.

Kumbalangi Nights
Kumbalangi Nights

மேலும், 'கும்பலங்கி நைட்ஸ்', 'அங்கமாலி டைரீஸ்' போன்ற இடங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களும் சுற்றுலாப் பயணிகளின் அதீத வரவேற்புக்குக் காரணமாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism