Published:Updated:

`அமேசான், ஃப்ளிப்கார்ட்டுக்குக் கடிவாளம்!' - மத்திய அரசுக்கு வியாபாரிகள் சங்கத்தின் புதிய கோரிக்கை

அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத் தளங்களின் பண்டிகைகால விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்க விடுத்திருக்கிறது.

Amazon, Flipkart
Amazon, Flipkart ( Twitter )

தீபாவளி, தசராப் பண்டிகைகள் நெருங்கிவரும் சூழலில் ஆன்லைன் தளங்கள் பண்டிகைகாலச் சிறப்பு விற்பனைக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மற்ற நாள்களைவிட இந்தச் சிறப்பு விற்பனை நாள்களில் சலுகைகளை அந்த நிறுவனங்கள் வாரி வழங்கும். 10 முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளால் குறிப்பிட்ட அந்த நாள்களில் விற்பனையும் பன்மடங்காக உயரும்.

Sale
Sale
Pixabay

தீபாவளி நெருங்கிவரும் நிலையில், 6 நாள்கள் சிறப்பு விற்பனையை செப்டம்பர் 29ம் தேதி முதல் அறிவித்திருக்கிறது ஃப்ளிப்கார்ட். அமேசான் நிறுவனம் இதுகுறித்து அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

அந்நிய நேரடி முதலீட்டு விதிகள்

அதிக தள்ளுபடி... ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி!

ஒருபுறம் ஆன்லைன் தளங்களின் வளர்ச்சி குறித்து பேசப்பட்டாலும், மறுபுறம் அதனால் சிறுவியாபாரிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இதனால், அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்தக் கோரிக்கையை அடுத்து அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மத்திய அரசு சில திருத்தங்களைக் கொண்டுவந்தது.

online shopping
online shopping
Twitter
உங்க வியாபார மாடலைக் காட்டுங்க... அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

அந்த விதிமுறைகள் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமலாகின. புதிய விதிமுறைகளுக்கேற்ப இந்த நிறுவனங்கள், பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளை அவர்களது தளத்தில் விற்பனைசெய்யக் கூடாது. சில்லறை வணிகர்களின் நலன்கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பின் கோரிக்கை

இந்தநிலையில், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் பண்டிகைகாலச் சிறப்பு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு (the Confederation of All India Traders) கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு அந்த அமைப்பு சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ``பத்து முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி அறிவிப்பதன் மூலம் ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் பொருள்களின் விலையை நிர்ணயிப்பதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

online shopping
online shopping
Pixabay

இதன்மூலம் சந்தையில் சமநிலையற்ற போட்டியை அவர்கள் உருவாக்குகிறார்கள். இது அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது'' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற விற்பனைகளை முழுவதுமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் இவற்றில் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Vikatan

என்ன சொல்கிறது ஃப்ளிப்கார்ட்?

இதுகுறித்து ஃப்ளிப்கார்ட் தரப்பிலோ, ``எங்களுடன் கைகோத்துள்ள விற்பனையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தகம் குறித்து நாங்கள் தெளிவாக விளக்கியிருக்கிறோம். அதன்மூலம், தங்களது தயாரிப்புப் பொருள்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்து, வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை அளிக்கிறார்கள்.

Flipkart
Flipkart
Twitter

அதேநேரம், எங்கள் தளத்தின்மூலம் அவர்களின் வியாபாரத்தையும் பெருக்குகின்றனர்'' என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிறப்பு விற்பனையை எதிர்பார்த்து ஏறக்குறைய 10,000 விற்பனையாளர்கள் காத்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது.

Vikatan

அமேசானின் விளக்கம்

அமேசான் தரப்பிலோ, சிறப்பு விற்பனையை எதிர்நோக்கி 50 ஆயிரத்துக்கும் அதிகமான விற்பனையாளர்கள் இருப்பதாகக் கூறுகிறது. அவற்றில் பெரும்பாலானவர்கள் சிறுவணிகர்கள் என்றும் அந்த நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது.

Amazon
Amazon
Twitter
Vikatan

``எங்கள் தளத்தில் விற்கப்படும் பொருள்களுக்கான விலையை விற்பனையாளர்களே நிர்ணயிக்கின்றனர்'' என்கிறது அமேசான்.