Published:Updated:

பாலின மாற்று அறுவை சிகிச்சை: ரூ. 2.5 லட்சம் வழங்கும் ராஜஸ்தான் அரசு!

திருநங்கை

இந்த திட்டம் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் இந்த சமூகத்தில் சுயமரியாதையுடன் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதையும், ஆளுமைகளை உருவாக்கி அவர்கள் வாழ வழி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாலின மாற்று அறுவை சிகிச்சை: ரூ. 2.5 லட்சம் வழங்கும் ராஜஸ்தான் அரசு!

இந்த திட்டம் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் இந்த சமூகத்தில் சுயமரியாதையுடன் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதையும், ஆளுமைகளை உருவாக்கி அவர்கள் வாழ வழி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Published:Updated:
திருநங்கை

திருநங்கைகள், திருநம்பிகள் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பினால் ரூ. 2.50 லட்சம் வரை உதவி வழங்கப்படும் என்று, ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.

திருநங்கைகளும், திருநம்பிகளும் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பினாலும், லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால், அவர்களால் செய்துகொள்ள இயலாத சூழல் உள்ளது. இந்த நிலையில், ரூ. 2.50 லட்சம் வரை அரசு வழங்கும் என ஒரு புதுமையான முயற்சியை, அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் இந்த சமூகத்தில் சுயமரியாதையுடன் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதையும், ஆளுமைகளாக உருவாக்கி அவர்கள் வாழ வழி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மூன்றாம் பாலினம்
மூன்றாம் பாலினம்
Pixabay

இது குறித்து, ராஜஸ்தான் மாநில சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் துணை இயக்குநர் ஓம்பிரகாஷ் தோஷ்னிவால் கூறுகையில், ``சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு செய்துகொள்ள விரும்புவோருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை, ஒரு திருநங்கை அல்லது ஒரு திருநம்பியின் விருப்பத்தின் பேரில் மட்டுமே மேற்கொள்ளப்படும். விருப்பமுள்ளவர்கள் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் இலவசம், அல்லது அரசே ரூ. 2.50 லட்சம் ரூபாய் வரை செலுத்தும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் திருநர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநில அரசு 10 கோடி ரூபாய் மதிப்பில், பாலின மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை செயல்படுத்த ‘உத்தன் கோஷ்’ எனும் திட்டம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. பாலின மாற்று அறுவை சிகிச்சை வெகுகாலம் எடுத்துக்கொள்ளும். அதோடு இதில் சிக்கலான பல கட்டங்கள் உள்ளன என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உளவியல் சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய கட்டங்களைக் கொண்டுள்ளது. நோயறிதல் மற்றும் ஹார்மோன் சிகிச்சைக்குப் பிறகு, ஒருவர் பாலின மாற்று அறுவை சிகிச்சையை தேர்வு செய்யலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" என்றார்.

transgender
transgender
transgender

ஆண் - பெண் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையில் வஜினோபிளாஸ்டி, லேபியோபிளாஸ்டி, பினெக்டோமி, க்ளிட்டிரோ மற்றும் ஆர்க்கிடெக்டோமி ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் மார்பக விரிவாக்கம், முகத்தை பெண்மயமாக்க முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் குரல் அறுவை சிகிச்சை ஆகியவையும் செய்யப்படுகின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நவம்பர் 20-ம் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் , ``எல்லா மாவட்டத்திலும் திருநங்கைகள் மற்றும் திருநம்பி சமுதாயத்திற்கு அடையாள அட்டைகள் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது", என்று சட்டமன்ற உறுப்பினர் டிக்காரம் ஜூலி தெரிவித்தார். ராஜஸ்தான் அரசின் இந்த திட்டம், திருநங்கைகள், திருநம்பிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.