Published:Updated:

`பில்லி, சூனியம் பயிற்சி பெற்றார்!' - சிறுமி இறந்ததால் விவசாயியை எரித்துக் கொன்ற கிராம மக்கள்

விசாகப்பட்டினத்தில் ஒரு சிறுமிக்கு சூனியம் வைத்ததால் அவர் இறந்துவிட்டதாக விவசாயி ஒருவரைக் கிராமத்தினர் உயிருடன் எரித்துள்ளனர்.

Fire
Fire

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புட்டாபந்தா (Puttabandha) என்ற கிராமத்தில் வசித்து வரும் 10 வயதுச் சிறுமிக்குத் திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சாதாரண காய்ச்சல் என கூறி அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடையவே அவர் உயிரிழந்துள்ளார்.

Fever
Fever

சிறுமியின் உயிரிழப்புக்கு அதே கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவர்தான் காரணம் எனக் கூறி, சிறுமியின் உறவினர்கள் அவரை அடித்து உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால், ஜெயராமின் குடும்பத்தினர் நேற்று காவல்நிலையத்தில் புகார் அளித்த பிறகே விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய தும்பிரிகுடா (Dumbriguda ) காவல்நிலைய அதிகாரி, ``புட்டபந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராம். விவசாயியான இவர் சில நாள்களாக பில்லி, சூனியம் போன்றவை செய்ய பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர் தன் பயிற்சியைத் தொடங்கிய பிறகு, அங்குள்ள ஒரு சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அது தொடர்பாகப் பஞ்சாயத்துக் கூட்டமும் நடந்துள்ளது.

panchayat  - File Photo
panchayat - File Photo

அதில் கிராமத் தலைவர் சிறுமியிடம், திடீர் உடல் நலக் குறைவுக்கு என்ன காரணம்’ எனக் கேட்டுள்ளார். அதற்குச் சிறுமி, ``ஜெயராமன் என் கனவில் வந்தார்’ எனக் கூறியுள்ளார். சிறுமியின் வார்த்தைகளை நம்பி அவருக்கு, ஜெயராமன் செய்வினை செய்துவிட்டார். அதனால்தான் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என மக்கள் சந்தேகித்தனர். பின்னர், ஜெயராமை அழைத்து மிரட்டியும் உள்ளனர்.

`இரண்டு வாரத்தில் 23 திருமணங்கள், 23 விவாகரத்துகள்! - இலவச வீட்டுக்காக மோசடி செய்த சீன குடும்பம்

இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் உயிரிழப்புக்கு ஜெயராம்தான் காரணம் என நினைத்து அவரையும் அவரின் குடும்பத்தினரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர் கிராம மக்கள். பின்னர், ஜெயராம் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர்.

Andhra Police
Andhra Police
wikipedia

இது தொடர்பாக ஜெயராம் குடும்பத்தினர் எங்களிடம் புகார் அளித்துள்ளனர். நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். சிறுமிக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவலும் மருத்துவ அறிக்கையில் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.