Published:Updated:

சேலை அணிந்து கால்பந்து விளையாடிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா! வைரலாகும் புகைப்படம்

மஹூவா மொய்த்ரா ( Dell )

சேலை அணிந்து கால்பந்து விளையாடிய எம்.பி மஹூவா மொய்த்ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சேலை அணிந்து கால்பந்து விளையாடிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா! வைரலாகும் புகைப்படம்

சேலை அணிந்து கால்பந்து விளையாடிய எம்.பி மஹூவா மொய்த்ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
மஹூவா மொய்த்ரா ( Dell )

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹூவா மொய்த்ரா. மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் நாடாளுமன்றத் தொகுதியின் (எம்.பி) உறுப்பினர் இவர். நாடாளுமன்ற அவைகளில் தனது அசரவைக்கும் பேச்சால் அனைவரது கவனத்தையும் பெற்றவர். அவரது தொகுதியில் ‘கிருஷ்ணாநகர் எம்.பி கோப்பை’ கால்பந்துப் போட்டி நடைபெற்றுவருகிறது. அப்போட்டியைத் தொடங்கி வைத்த மஹுவா மொய்த்ரா களத்தில் இறங்கி சேலையுடன் கால்பந்து விளையாடியுள்ளார்.

சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் கொண்ட புடவையைக் கட்டிக்கொண்டு, கண்ணில் கூலிங்கிளாஸ் மற்றும் காலில் ஷூ மாட்டிக்கொண்டு விளையாடியுள்ளார். கால்பந்து விளையாடும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் “கிருஷ்ணாநகர் எம்.பி கோப்பைத் தொடரின் வேடிக்கையான தருணம். ஆம், நான் புடவை கட்டிக்கொண்டு விளையாடினேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவர் பகிர்ந்துகொண்ட புகைப்படம் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.