Published:Updated:

விசாரணை எனக் கூறி பெண்களிடம் வரம்பு மீறுகிறதா எல்லைப் பாதுகாப்பு படை? குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?

எல்லைப் பாதுகாப்பு படை

``எல்லைப் பாதுகாப்பு படையினர் எல்லையில் உள்ள பெண்களின் மீது தங்களின் அதிகாரத்தைக் காட்டுகின்றனர். அவர்கள் பெண்களிடம் சோதனை என்ற பெயரில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குகின்றனர். இவர்கள் எப்படி தேசப் பற்றுள்ளவர்களாக இருக்க முடியும்?" - உதயன் குஹா

விசாரணை எனக் கூறி பெண்களிடம் வரம்பு மீறுகிறதா எல்லைப் பாதுகாப்பு படை? குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?

``எல்லைப் பாதுகாப்பு படையினர் எல்லையில் உள்ள பெண்களின் மீது தங்களின் அதிகாரத்தைக் காட்டுகின்றனர். அவர்கள் பெண்களிடம் சோதனை என்ற பெயரில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குகின்றனர். இவர்கள் எப்படி தேசப் பற்றுள்ளவர்களாக இருக்க முடியும்?" - உதயன் குஹா

Published:Updated:
எல்லைப் பாதுகாப்பு படை

சில நாள்களுக்கு முன் மேற்கு வங்க சட்டசபையில், சர்வதேச எல்லையில், எல்லைப் பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பை நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்தபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உதயன் குஹா கூறிய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்திற்குப் பிறகு, இத்தகைய தீர்மானத்தை தாக்கல் செய்து நிறைவேற்றிய இரண்டாவது மாநிலம் மேற்கு வங்கமாகும்.

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம், எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்பு படையினுடைய அதிகாரத்திற்கான வரம்புகளை 15 கிலோமீட்டரில் இருந்து 50 கிலோமீட்டர் வரை அதிகரிப்பதாக அறிவித்தது. இதற்கு எல்லையோர மாநிலங்களாக இருக்கும் பஞ்சாப், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. தொடர்ந்து இந்த அறிவிப்பை எதிர்த்து மேற்கு வங்க அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

உதயன் குஹா
உதயன் குஹா
Facebook Image:/ Udayan Guha

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து நடந்த விவாதத்தின்போது திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான உதயன் குஹா, ``எல்லைப் பாதுகாப்பு படையினர் எல்லையில் உள்ள பெண்களின் மீது தங்களின் அதிகாரத்தைக் காட்டுகின்றனர். அவர்கள் பெண்களிடம் சோதனை என்ற பெயரில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குகின்றனர். இவர்கள் எப்படி தேசப் பற்றுள்ளவர்களாக இருக்க முடியும்?" எனக் கூறினார்.

இதற்கிடையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து தலைமையிலான பா.ஜ.க பிரதிநிதிகள் குழு, கொல்கத்தா அருகே உள்ள எல்லைப் பாதுகாப்பு படையினரின் அலுவலகத்திற்குச் சென்று உதயன் குஹாவின் கருத்துக்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனையடுத்து வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிஎஸ்எஃப் ஐஜி ரவி காந்தி, ``எல்லை பாதுகாப்பு படையினர் பெண்களைத் துன்புறுத்துவதில்லை. சந்தேகப்படும்படியான பெண்களைத் தேடுவதற்கு எனப் பெண் பணியாளர்கள் எங்களிடம் உள்ளனர். எந்த ஆண் எல்லை பாதுகாப்பு படைவீரர்களும் ஒரு பெண்ணை எந்தக் காரணத்திற்காகவும் தொடுவதில்லை. மேலும் இது போன்ற அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. பெண்களை அநாகரிகமாக நடத்துவது என்பதேற்கே இடமில்லை. கடத்தலைத் தடுக்கவும், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை அதிகரித்துள்ளோம். பிஎஸ்எஃப் (BSF) அதன் விதிகளை என்றும் கடைபிடிக்கிறது'' என்றார்.

எல்லை பாதுகாப்பு படை
எல்லை பாதுகாப்பு படை

பிஎஸ்எஃபின் அதிகார வரம்பை நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவு, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைத் துன்புறுத்தும் என்ற அச்சத்தை எழுப்புகிறது என்று திரிணாமுல் கட்சி கூறியிருந்தது. அதற்கு பதிலளித்த பிஎஸ்எப் ஐஜி , ``எல்லை பாதுகாப்பு படையின் முக்கிய நோக்கம் ஊடுருவலைத் தடுப்பதுதான். நாங்கள் விசாரணையை மேற்கொள்பவர்கள் அல்ல, காவல்துறையினரின் பணியில் நாங்கள் தலையிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. பிஎஸ்எஃப், மாநில காவல்துறையுடன் நல்ல உறவைப் பேணி வருகிறது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையின் பாதுகாப்பைப் பராமரிப்பதே எங்களின் முதன்மையான பொறுப்பு'' எனக் கூறி குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.