Published:Updated:

`ஸ்ரீராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா..!’ -ராமர் கோயிலுக்கான அறக்கட்டளையை அறிவித்தார் மோடி

அயோத்தி - மோடி
அயோத்தி - மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கான அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விவகாரம் நீண்ட காலமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், `சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காக புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அயோத்தி
அயோத்தி

அதன்படி தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த 1-ம் தேதி நடந்த பட்ஜெட் தாக்குதலுக்குப் பிறகு அதன் மீதான விவாதம் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில் பேசிய மோடி, ``உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி ஒரு குறிப்பிடத்தக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அயோத்தி நிலம்! - 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன? #AyodhyaVerdict

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு விரிவான திட்டத்தை மத்திய அமைச்சரவை தயார் செய்துள்ளது. எனது தலைமையிலான அரசு, `ஸ்ரீராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவது தொடர்பாகவும் அது தொடர்பான பிரச்னைகள் குறித்தும் தன்னிச்சையாகவும் முடிவெடுக்கும். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்ட அனைவரும் ஆதரவு அளிப்போம்” என்று கூறினார். அவர் பேசி முடிக்கும்போது நாடாளுமன்ற அவை முழுவதும் `ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷங்கள் எதிரொலித்துள்ளன.

மோடி
மோடி

அயோத்தி நிலம் முழுவதும் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் படியே அனைத்து நடைமுறைகளும் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.

அதேபோல், வக்ஃபு வாரியத்துக்கு வழங்க வேண்டிய ஐந்து ஏக்கர் நிலத்தை விரைவில் உத்தரப்பிரதேச அரசு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்துள்ள ராமர் கோயில் அறக்கட்டளையில் எந்த அரசியல் கட்சியும் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பின் செல்ல