Published:Updated:

12 வருடமாக ஆசிரியர்; இன்று zomato -வின் டெலிவரி ஏஜென்ட்; சமூக வலைதளப் பதிவால் கிடைத்த ரூ.75,000!

பரிசளித்த புகைப்படம். துர்கா சங்கர் மீனா (இடதுபுறம்)

கடும் வெயிலில் சைக்கிளில் வந்து டெலிவரி செய்தது வாடிக்கையாளரான ஆதித்யா சர்மாவை அதிர்ச்சியாக்கியது. அவர் பெயர் 'துர்கா சங்கர் மீனா'.

12 வருடமாக ஆசிரியர்; இன்று zomato -வின் டெலிவரி ஏஜென்ட்; சமூக வலைதளப் பதிவால் கிடைத்த ரூ.75,000!

கடும் வெயிலில் சைக்கிளில் வந்து டெலிவரி செய்தது வாடிக்கையாளரான ஆதித்யா சர்மாவை அதிர்ச்சியாக்கியது. அவர் பெயர் 'துர்கா சங்கர் மீனா'.

Published:Updated:
பரிசளித்த புகைப்படம். துர்கா சங்கர் மீனா (இடதுபுறம்)

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா சர்மா என்ற 18 வயது இளைஞர், zomato மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவரது உணவைக் கொண்டு வந்த zomato டெலிவரி ஏஜென்ட் , கடும் வெயிலில் சைக்கிளில் வந்தது வாடிக்கையாளரான ஆதித்யா சர்மாவை அதிர்ச்சியாக்கியது. அவர் பெயர் 'துர்கா சங்கர் மீனா'. இவர் 12 வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றி பின்பு கோவிட் பெருந்தொற்றின் பரவலால் தன் வேலையை இழந்து பின்னர் zomato-வில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

அதன்பின் வாடிக்கையாளர் ஆதித்யா சர்மா, தனது சமூகவலைதள பக்கத்தில் zomato டெலிவரி ஏஜென்ட் 'துர்கா சங்கர் மீனா' பற்றி பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். இதைக் கண்ட சமூகவலைதள பயனர்கள் கடும் வெயிலில் சைக்கிள் பயணம் செய்ய வேண்டாம் இருசக்கர வாகனம் வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் இருசக்கர வாகனம் வாங்க தன்னிடம் பணம் இல்லை என்று துர்கா சங்கர் கூறியதையடுத்து ஆதித்யா சர்மா சமூக வலைதளத்தில் இவருக்காக நன்கொடை திரட்டியுள்ளார். ஆச்சர்யம் என்னவென்றால் துர்கா சங்கரின் கடும் உழைப்பைப் பாராட்டி முகம் தெரியாத சமூக வலைதளப் பயனர்கள் பலர் மொத்தம் ரூ.75,000 நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இந்தப் பணத்தை திரட்டிய ஆதித்யா சர்மா துர்கா சங்கருக்கு இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார். மேலும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து துர்கா சங்கர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டதாகவும் பதிவிட்டிருக்கிறார். மனித நேயம் இருக்கும் வரை இங்கு ஏழை என்று யாரும் இல்லை என்று 18 வயதேயாகும் ஆதித்யா சர்மாவின் இந்த மனிதநேயச் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism