சில தினங்களுக்கு முன்பு, புனேவில் உள்ள 'CHSC' மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் மூளைச் சாவு காரணமாக உயிரிழந்தார்.
ஆனால் அதேநேரம், அவரது இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பிற உறுப்புகள் நன்றாக செயல்பட்டன. இறப்பிற்குப் பிறகு உடலை தானம் செய்யலாம் என்பதை அறிந்த இளம் பெண்ணின் பெற்றோர் தங்களின் மகள் இறந்த சோகத்தையும் கடந்து, மகளின் உடலை தானம் செய்வது குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். பின்னர் மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளருடன் ஆலோசித்து அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகளை உரிய நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து உரிய நேரத்தில் செயல்பட்ட மருத்துவர்குழு மூளைச் சாவடைந்த அப்பெண்ணின் சிறுநீரகங்களை, சிறுநீரகத்தை இழந்த இரு இந்திய ராணுவத்தின் ராணுவ வீரர்களுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தினர். அவரது கல்லீரல் புனே ரூபி ஹால் கிளினிக்கில் உள்ள நோயாளிக்கு வழங்கப்பட்டது. அவரது கண்கள் 'CH(SC)' ஆயுதப் படைமருத்துவக் கல்லூரியில் உள்ள கண் பாதுகாப்பு மையத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் இது பற்றி புனே பாதுகாப்பு படையினர், 'அப்பெண்ணின் உடல் தானம் மூலம் கடுமையாக நோய் வாய்ப்பட்டு இருந்த ஐந்து நோயாளிகளுக்கு உயிர் மற்றும் கண்பார்வை கிடைத்துள்ளது' என்று நன்றி தெரிவித்துள்ளனர்.