Published:Updated:

உ.பி: பட்டப்பகலில் கடத்தல்; தூக்கில் தொங்கிய பட்டியலினச் சகோதரிகள்; பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

போராட்டம் நடந்த இடத்தில் லட்சுமி சிங்

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பட்டியலினச் சகோதரிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்துவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

உ.பி: பட்டப்பகலில் கடத்தல்; தூக்கில் தொங்கிய பட்டியலினச் சகோதரிகள்; பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பட்டியலினச் சகோதரிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்துவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Published:Updated:
போராட்டம் நடந்த இடத்தில் லட்சுமி சிங்

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் ஏற்கெனவே விவசாயிகள் போராட்டத்தில் மாநில அமைச்சர் அஜய் குமாரின் மகன் அசிஷ் மிஸ்ரா, சிலர் மீது கார் ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள தமோலியாபுர்வா என்ற கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் பட்டியலினச் சகோதரிகள் இரண்டு பேர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது துப்பட்டாவில் தூக்கில் மாட்டித் தொங்கயிருந்தனர்.

இரண்டு பேரையும் யாரோ சிலர் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றதாக இரு சகோதரிகளின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இரண்டு பேரும் மைனர் ஆவர். அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்துவிட்டதாகச் சிறுமியின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளைக் கைதுசெய்வதாகக் கூறி கலைந்து போகச்செய்தனர். மூன்று பேர் சேர்ந்து சிறுமிகளைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. போலீஸார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். அங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உ.பி: பட்டப்பகலில் கடத்தல்; தூக்கில் தொங்கிய பட்டியலினச் சகோதரிகள்; பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

போலீஸ் அதிகாரி லட்சுமி சிங் இது குறித்துக் கூறுகையில், ``இரு மைனர் சிறுமிகள் தங்களது துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் உடலில் எந்தவிதக் காயமும் இல்லை. இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெற்றோர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்படும்” என்று தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

சம்பவ இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ``யோகி ஆதித்யநாத் அரசும், குண்டர்களும் தினம் தினம் சகோதரிகளையும், தாய்மார்களையும் துன்புறுத்துகின்றனர். இரு சிறுமிகளைக் கடத்தி, கொலைசெய்தவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்கொலை செய்து இறந்துபோன இரண்டு சகோதரிகளும் பட்டப்பகலில் கடத்திச்செல்லப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தினம் தினம் பேப்பர்களில் விளம்பரம் செய்தால் மட்டும் சட்டம்-ஒழுங்கு சரியாகிவிடாது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். கடந்த ஆண்டும் 19 வயது பட்டியலினச் சிறுமி மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அந்தச் சிறுமியின் வீட்டுக்கு பிரியங்கா காந்தி சென்றபோது அவரையும் போலீஸார் கைதுசெய்தனர். செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள் மீதும் அடக்குமுறை கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இந்த விவகாரம் குறித்து பிரியங்கா காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இரு சகோதரிகள் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பகல் வேளையில் சிறுமிகள் கடத்தப்பட்டிருப்பதாகக் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். வெறுமனே தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் பொய் விளம்பரம் செய்வதால் சட்டம்-ஒழுங்கு சீராகாது. எல்லாவற்றுக்கும் மேலாக, உ.பி-யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரித்துவருகின்றன?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.