Published:Updated:

விபத்துக்குள்ளான லாரி; ஆப்பிள்களை அள்ளிச் சென்ற மக்கள் - சோகத்திலிருந்த டிரைவரை நெகிழவைத்த இளைஞர்கள்

டிரைவரை நெகிழவைத்த இளைஞர்கள்
News
டிரைவரை நெகிழவைத்த இளைஞர்கள் ( ட்விட்டர் )

விபத்தில் சிக்கிய லாரி டிரைவருக்கு உதவுவதற்கு பதிலாக பலர் ஆப்பிள் பெட்டிகளைத் திருடுவதில் மும்முரமாக இருந்தது வேதனையாக இருந்தது. பஞ்சாப்பில் நடந்த இந்தச் சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது.

விபத்துக்குள்ளான லாரி; ஆப்பிள்களை அள்ளிச் சென்ற மக்கள் - சோகத்திலிருந்த டிரைவரை நெகிழவைத்த இளைஞர்கள்

விபத்தில் சிக்கிய லாரி டிரைவருக்கு உதவுவதற்கு பதிலாக பலர் ஆப்பிள் பெட்டிகளைத் திருடுவதில் மும்முரமாக இருந்தது வேதனையாக இருந்தது. பஞ்சாப்பில் நடந்த இந்தச் சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது.

Published:Updated:
டிரைவரை நெகிழவைத்த இளைஞர்கள்
News
டிரைவரை நெகிழவைத்த இளைஞர்கள் ( ட்விட்டர் )

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரிலிருந்து லாரி ஒன்று ஆப்பிளை ஏற்றிக்கொண்டு பீஹார் நோக்கி புறப்பட்டிருக்கிறது. இந்த லாரியை, ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோப்போரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ஷாகித் ஓட்டினார். இந்த நிலையில், லாரி கடந்த சனிக்கிழமை பஞ்சாப்பில் அமிர்தசரஸ் - டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள பதேகர் மாவட்டத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, லாரி நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான லாரி
விபத்துக்குள்ளான லாரி
ட்விட்டர்

அப்போது, அந்த பாதையில் சென்றவர்கள், அருகில் இருந்த கிராமவாசிகள், வாகனத்தில் சென்றவர்கள் என பலர் லாரியிலிருந்து கொட்டிய ஆப்பில்களைப் பெட்டி, பெட்டியாக எடுத்துச் சென்றிருக்கின்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானது.

காசோலையுடன் ஷாகித்
காசோலையுடன் ஷாகித்
ட்விட்டர்

இந்த நிலையில், பஞ்சாப்பைச் சேர்ந்த ராஜ்விந்தர் சிங் என்பவரும் முகாலியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவரும் இணைந்து, நேற்று முன்தினம் காவல்துறையை அணுகி, ``பழங்கள் திருடப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை நாங்கள் ஈடுசெய்ய விரும்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், இருவரும் சேர்ந்து ரூ9.12 லட்சத்துக்கான காசோலையை, லாரி உரிமையாளர் ஷாகித்திடம் வழங்கியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம், "விபத்தில் சிக்கிய லாரி டிரைவருக்கு உதவுவதற்கு பதிலாக பலர் ஆப்பிள் பெட்டிகளைத் திருடுவதில் மும்முரமாக இருந்தது வேதனையாக இருந்தது. பஞ்சாப்பில் நடந்த இந்தச் சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. எனவே அதே பஞ்சாப்பிலிருந்து நல்ல செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க விரும்பினோம். அதனால் லாரி உரிமையாளருக்கு நஷ்டஈடு வழங்கினோம்" என்றனர்.

லாரி உரிமையாளர் ஷாகித், "பிறருக்கு உதவுவதில் பஞ்சாப் மக்களைப் போன்று பெயர் பெற்றவர்கள் வேறுயாருமில்லை. ஆனால், இங்கு இது போல் நடந்தது என்பதை என்னால் நம்பமுடியவில்லை" என்றார்.