Published:Updated:

காஷ்மீர்: பள்ளிக்குக்குள் நுழைந்து இரண்டு ஆசிரியர்களைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீவிரவாதிகள்
தீவிரவாதிகள் ( சித்திரிப்புப் படம் )

சமீபகாலமாக காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதுவரை 7 பொதுமக்கள் தாக்குதல்களினால் உயிரிழந்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காஷ்மீரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த இரண்டு ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்திருக்கின்றனர். காஷ்மீர் தலைநகர் ஶ்ரீநகர் அருகே இட்கா சங்கம் என்ற பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கொரோனா காரணமாக மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வராத நிலையில், ஆசிரியர்கள் மட்டும் வருகை தந்து ஆன்லைன் மூலமாகப் பாடம் நடத்தியிருக்கின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் அத்துமீறி பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள், தலைமை ஆசிரியர் சுபுந்தர் கவுர், ஆசிரியர் தீபக் சந்த் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பியோடியிருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர்: புதிய வடிவில் தீவிரவாதத் தாக்குதல்? மோடி அரசின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையா?!
காஷ்மீர்
காஷ்மீர்

தீவிரவாதிகளால் சுடப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும், சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், சில நிமிடங்களிலேயே இருவரும் உயிரிழந்தனர். இந்தச் செய்தி அறிந்து வந்த காஷ்மீர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து பேசிய காஷ்மீர் காவல்துறை ஆணையர் தில்பாக் சிங், `` இந்தத் தாக்குதலை நடத்தியவர்களின் பின்னணியில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் `எதிர்ப்பு முன்னணி' என்ற தீவிரவாத இயக்கம் உள்ளது. விரைவில் இதை வெளியில் அம்பலப்படுத்துவோம்' எனக் கூறியிருக்கிறார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

இந்த தாக்குதல் குறித்து பேசிய ராகுல்காந்தி, `` காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் போன்றவற்றால் தீவிரவாதம் ஒழிக்கப்படவில்லை. காஷ்மீர் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்திருக்கிறது" என குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், தீவிரவாதிகளின் இந்தச் சம்பவத்துக்குக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சமீபகாலமாக காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதுவரையில் 7 பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு