Published:Updated:

"பாதையை உருவாக்கித் தந்தவர் நீங்கள்!"- மோடிக்கு நன்றி தெரிவித்த கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ்!

ரிக்கி கேஜ்

இரண்டாவது முறையாக கிராமி விருது வென்ற இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

"பாதையை உருவாக்கித் தந்தவர் நீங்கள்!"- மோடிக்கு நன்றி தெரிவித்த கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ்!

இரண்டாவது முறையாக கிராமி விருது வென்ற இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ரிக்கி கேஜ்

இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் 2022-ம் ஆண்டிற்கான 64வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்ஜின் ‘டிவைன் டைட்ஸ் (Divine Tides)’ என்ற ஆல்பம் ‘சிறந்த நியூ ஏஜ் ஆல்பம்’ என்ற கிராமி விருதை வென்றது. ஏற்கெனவே 2015-ல் இவரின் ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ என்ற ஆல்பத்திற்காக கிராமி விருது வழங்கப்பட்ட நிலையில், இது இவருக்கு இரண்டாவது கிராமி விருதாகும்.

இதையடுத்து இவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தற்போது பிரதமர் மோடி இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்க்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த ரிக்கி கேஜ், "மாண்புமிகு பிரதமர் அவர்களின் பாராட்டுக்கு நன்றி. நான் உங்களைப் பெருமைப்படுத்தினேன் என்று நம்புகிறேன். 7 ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது முதல் கிராமி விருதை வென்றபோது நீங்கள்தான் சுற்றுச்சூழல் சார்ந்த உணர்வின் பாதையில் என்னைக் கொண்டு சென்றீர்கள். நான் இன்று அந்த வழியை பின்பற்றி இருக்கிறேன். உங்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றி" என்று ட்விட்டர் மூலம் தனது நன்றித் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism