Published:Updated:

பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட இரு காதலிகள்; எஸ்கேப் ஆன காதலன்! - எச்சரித்து அனுப்பிய போலீஸ்

சித்திரிப்புப் படம்

மகாராஷ்டிராவில் ஒரு காதலுக்கு இரண்டு பெண்கள் பேருந்து நிலையத்தில் சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்திலுள்ள பைதன் என்ற இடத்தில் இருக்கும் பேருந்து நிலையத்துக்கு 17 வயது பெண், தன் காதலனுடன் வந்தார். இது குறித்துக் கேள்விப்பட்டு அதே வாலிபரை காதலிக்கும் மற்றொரு பெண்ணும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பேருந்து நிலையத்தில் அந்த வாலிபரைக் காதலிப்பது தொடர்பாக இரண்டு பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அவர்களது சண்டையைத் தீர்த்துவைக்க காதலன் முயன்றார். ஆனால், முடியாத காரணத்தால் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட இரு காதலிகள்; எஸ்கேப் ஆன காதலன்! - எச்சரித்து அனுப்பிய போலீஸ்

அனைவர் முன்னிலையில் இரண்டு பெண்கள் மோசமான முறையில் மோதிக்கொண்டதைப் பார்த்த பொதுமக்களில் சிலர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரண்டு பெண்களுக்கும் போலீஸார் கவுன்சலிங் கொடுத்து இனிமேல் பொது இடத்தில் சண்டையிட்டால் பிடித்துச் சிறையில் அடைத்துவிடுவோம் என்று எச்சரித்து இரண்டு பேரையும் அனுப்பிவைத்தனர். இந்தச் சண்டையால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் பரவிவருகிறது.