Published:Updated:

இந்தியாவின் பஞ்சத்துக்கு வேலையின்மைதான் காரணம் - ஐ.நா. அறிக்கை!

இந்தியாவின் பஞ்சத்துக்கு வேலையின்மைதான் காரணம் என ஐ.நா அறிக்கை அறிவித்துள்ளது.

பசி
பசி

கடந்த 2016-18-ம் ஆண்டுகளில் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட மக்களின் எண்ணிக்கை 19.44 கோடியாகக் குறைந்துள்ளது. இது 2004-2016 ஆகிய ஆண்டுகளில் 25.39 கோடியாக இருந்தது என ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், உணவின்மையினால் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட, 18 வயதுக்கு மேல் உள்ள மக்களின் எண்ணிக்கை 2.41 கோடியிலிருந்து 3.28 கோடியாக அதிகரித்துள்ளது.

பசி
பசி

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.80 லட்சமாக இருக்கிறது என்பதையும், இதற்கு முக்கிய காரணங்களாக வேலையின்மை, பருவநிலை மாற்றம், உணவு உற்பத்தி பாதிப்பு ஆகியவற்றை ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 'State of Food Security and Nutrition in the World 2019' என்கிற தலைப்பின் கீழ், உலக மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த ஆராய்ச்சியை எஃப்.ஏ.ஓ, ஐ.எஃப்.ஏ.டி, யுனிசெஃப், டபிள்யூ.எஃப்.பி மற்றும் டபிள்யூ.ஹெச்.ஓ என்கிற அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து செய்து முடித்திருக்கின்றன.

கடந்த 2018-ம் ஆண்டில் உலக அளவில் சுமார் 82 கோடி மக்கள் பசியின் கொடுமையினால் பரிதவித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு வேளை உணவு கூட சரியாகக் கிடைப்பதில்லை.

இந்த எண்ணிக்கையானது இதற்கு முந்தைய 2017-ம் ஆண்டில் 81.10 கோடியாக இருந்தது. இதை 2030-ம் ஆண்டுக்குள் பூஜ்யத்துக்குக் கொண்டுவர வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.