Published:Updated:

மத்திய பட்ஜெட் 2023: எந்தெந்தப் பொருள்கள் விலை அதிகரிக்கும், குறையும்?

மத்திய பட்ஜெட் 2023
News
மத்திய பட்ஜெட் 2023

2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் சில பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரித்தும், சில பொருள்களுக்கு வரி விதிப்பை குறைத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published:Updated:

மத்திய பட்ஜெட் 2023: எந்தெந்தப் பொருள்கள் விலை அதிகரிக்கும், குறையும்?

2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் சில பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரித்தும், சில பொருள்களுக்கு வரி விதிப்பை குறைத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய பட்ஜெட் 2023
News
மத்திய பட்ஜெட் 2023

2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் சில பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரித்தும், சில பொருள்களுக்கு வரி விதிப்பைக் குறைத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் எந்தெந்தப் பொருள்கள் விலை கூடும் அல்லது குறையும் என்பதைப் பார்ப்போம்.

மத்திய பட்ஜெட் 2023
மத்திய பட்ஜெட் 2023

விலை அதிகரிக்கும் பொருள்கள்...

புகையிலைப் பொருள்கள் மீதான வரி 16% வரை அதிகரிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட்டின் விலை கடுமையாக உயரும்.

தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. அதனால் இவற்றால் செய்யப்படும் அணிகலன்கள் மற்றும் பொருள்களுக்கு விலை அதிகரிக்கும்.

சமையலறை மின்சார புகைபோக்கிக்கான இறக்குமதி வரி 7.5%-லிருந்து 15% ஆக அதிகரித்துள்ளதால், இதன் விலை கூடும்.

எனவே மின்சார சமையலறை புகைபோக்கி, தங்கம், வெள்ளி, வைரம், செப்பு மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் மற்றும் பொருள்கள், ரப்பர்களால் செய்யப்பட்ட பொருள்கள் சிகரெட்டுகள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும்.

விலை குறையும் பொருள்கள்...

செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்க அதன் உபகரணங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைத்துள்ளது, இதனால் செல்போன்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், இறால் உணவுப் பொருள்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை அளிக்கப் பட்டுள்ளது. இதனால் இறால் தீவனத்தின் விலை குறையும்.

மத்திய பட்ஜெட் 2023
மத்திய பட்ஜெட் 2023

ஆய்வகத்தில் வைரங்கள் தயாரிக்கப் பயன்படும் விதைகளுக்கான அடிப்படை சுங்க வரியைக் குறைத்துள்ளது.

லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்கான இறக்குமதியில் வரிவிலக்கு அப்படியே தொடர்கிறது. கேமரா லென்ஸ்கள் மற்றும் தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. இதனால் விலையேற்றம் இருக்காது, அத்துடன் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.   

எனவே செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் DSLR கேமராக்களுக்கான லென்ஸ்கள், டிவி பேனல்களின் பாகங்கள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள், நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால், அமில-தர ஃப்ளோர்ஸ்பார் உள்நாட்டில் வளர்க்கப்படும் இறால், வைரம் தயாரிக்க பயன்படும் விதைகள் ஆகியவற்றின் விலை குறையும்.