Published:Updated:

ராணுவத்தை எச்சரித்த உச்ச நீதிமன்றம்; பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி வழங்க உத்தரவு!

72 பெண் அதிகாரிகளை குறுகிய காலப் பணி முடிந்ததும் பணியிலிருந்து விடுவிக்க ராணுவம் உத்தரவிட்டது. அவர்களில் 36 பெண் அதிகாரிகள், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இந்திய ராணுவத்தைக் கடுமையாகச் சாடியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

தகுதி வாய்ந்த 11 பெண் ராணுவ அதிகாரிகள் நிரந்தரப் பணியில் (Permanent commission) சேர்க்கப்பட வேண்டும் எனக் கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவை செயல்படுத்தத் தவறியதாக இந்திய ராணுவத்தை உச்ச நீதிமன்றம் எச்சரித்ததால், 10 நாள்களுக்குள் 11 பெண் அதிகாரிகளை நிரந்தரப் பணியில் சேர்க்க முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விசாரணையை மேற்கொண்ட நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வின் அறிவுறுத்தலின்படி, 10 நாள் களுக்குள் அவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்குவதற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

Supreme Court Of India
Supreme Court Of India
`மத்திய அரசு ஆர்.பி.ஐ பின்னால் ஒளிந்து கொள்கிறது!’- கடன் தவணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம்

முன்னதாக, இந்திய ராணுவத்தில் உள்ள பெண் ராணுவ அதிகாரிகள், குறுகிய காலப் பணியில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டு வந்தனர். இதனால் அவர்கள் அடுத்தடுத்த உயர் பதவிகளுக்குச் செல்ல முடியாமல் இருந்தது. தற்போது பெண்கள் நிரந்தரப் பணியில் சேரும்பட்சத்தில் இவர்களுக்கு பதவி உயர்வு, சிறப்புப் பயிற்சிகள், சலுகைகள் என ஆண் அதிகாரிகளுக்குக் கிடைத்து வந்த அனைத்து அங்கீகாரங்களும் கிடைக்கும்.

தங்களைக் குறுகிய காலப் பணியில் இருந்து நிரந்தரப் பணிக்கு மாற்றக் கோரி, கடந்த ஆண்டு பிப்ரவரியில் சில பெண் ராணுவ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை அடுத்து, மதிப்பீட்டுத் தேர்வுகளில் 60% மதிப்பெண்கள் மற்றும் மருத்துவ உடல் தகுதி பெற்றிருக்கும் பெண்களுக்கு நிரந்தரப் பணி வழங்க உச்ச நீதிமன்றம் ராணுவத்தை அறிவுறுத்தியது.

ஆனால் அதை மீறி, 72 பெண் அதிகாரிகளைக் குறுகிய காலப் பணி முடிந்ததும் பணியிலிருந்து விடுவிக்க ராணுவம் உத்தரவிட்டது. அவர்களில் 36 பெண் அதிகாரிகள், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். 72 பெண் அதிகாரிகளையும் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடைவிதித்தது உச்ச நீதிமன்றம்.

indian army
indian army

மத்திய அரசின் பதில் மனுவில், `72 பெண் அதிகாரிகளில் 25 பெண் அதிகாரிகள் மருத்துவ ரீதியில் தகுதிபெறவில்லை' என்று தெரிவித்தது. `ராணுவம் தகுதிபெற்றதாகக் குறிப்பிட்ட பெண் அதிகாரிகளுக்கான நிரந்தரப் பணி ஆணை ஒரு வாரத்துக்குள் வழங்கப்பட வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படாததால் நிரந்தரப் பணி கோரி நீதிமன்றத்தில் 36 பெண் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். அவர்களில் 22 பேருக்கு மட்டுமே நிரந்தரப் பணி வழங்கியது ராணுவம். மற்றவர்களில் 11 பெண் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பில், ராணுவத் திலிருந்து விடுவிக்கப்பட்ட 72 பெண் அதிகாரிகளில் நீதிமன்றத்தை அணுகாத, ஆனால் தகுதியுள்ள அனைத்துப் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும். அதை நிறைவேற்றாத பட்சத்தில் இந்திய ராணுவத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சீனா: 3-வது முறையாக அதிபர்... வலிமைமிக்க தலைவராக ஜி ஜின்பிங்! - புதிய தீர்மானத்துக்கு என்ன காரணம்?!

அதைத் தொடர்ந்து, `மார்ச் மாத நீதிமன்ற உத்தரவின்படி தகுதி வரம்பை பூர்த்தி செய்யும் அனைத்து பெண் ராணுவ அதிகாரிகளுக்கும் ராணுவம் நிரந்தரப் பணியை வழங்கும்' என்று அரசு வழக்கறிஞர் கூறினார். `நீதிமன்றத்தை அணுகிய 11 பெண் அதிகாரிகளுக்கும் அடுத்த 10 நாள்களுக்கும் நிரந்தரப் பணி ஆணை வழங்கப்பட வேண்டும், தகுதியுடைய மற்றவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு