Published:Updated:

`போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது குற்றமாகாது, ஆனால்..!' - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

நிதின் கட்கரி

போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது விரைவில் சட்டப்பூர்வமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

`போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது குற்றமாகாது, ஆனால்..!' - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது விரைவில் சட்டப்பூர்வமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Published:Updated:
நிதின் கட்கரி

தற்போது போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டினால் குற்றமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. போனில் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுவது அதிகமான விபத்துகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த நிலையில், போனில் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டுவது சட்டப்பூர்வமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது நாட்டில் விரைவில் சட்டப்பூர்வமாக்கப்படும்.

ஆனால், அதற்கு சில விதிகளை பின்பற்றவேண்டும். போனை கையில் வைத்திருக்காமல் பேசினால் மட்டுமே அதற்கு அனுமதிக்கப்படும். அதோடு போன் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கவேண்டும். அப்படி கையில் போன் இல்லாத வகையில் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும் போது டிராஃபிக் போலீஸார் அபராதம் விதித்தால் அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முடியும்.

வாகன சோதனை
வாகன சோதனை
சித்தரிப்புப் படம்

கையில் இல்லாத வகையில் போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது குற்றமாக கருதப்படாது. அதற்கு டிராஃபிக் போலீஸார் அபராதமும் விதிக்கமுடியாது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் புளூடூத் அல்லது ஹெட்போன் மூலம் மொபைல் போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டலாம் என்று மத்திய அமைச்சரே தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வாகனங்களை ஓட்டும்போது வழித்தடங்களை தெரிந்து கொள்ள மொபைல் போனை பயன்படுத்தலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. தற்போது போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதையும் சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் விரைவில் சட்டப்பூர்வமாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism