Published:Updated:

`உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாடு; காஷ்மீர் செல்லும் 36 மத்திய அமைச்சர்கள்!’ - மோடி சொன்ன அட்வைஸ்

மோடி
மோடி

36 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு, இன்று முதல் ஒரு வார காலத்துக்கு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து ஆய்வு நடத்த உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 5 -ம் தேதி மத்திய அரசு ரத்துசெய்தது. நாடாளுமன்றத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு இருந்தும் மத்திய அரசு இந்த சட்டப்பிரிவை நீக்கியது.

காஷ்மீர்
காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கு இணையதளம் முடக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உலக நாடுகள் பேசிவரும் நிலையில், 36 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று, இன்று ஜம்மு - காஷ்மீர் பகுதிகளுக்குச் செல்ல இருக்கிறது.

உள்துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்

இந்தப் பயணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைச்சர்களை நேற்று சந்தித்த மோடி, இந்தப் பயணம், நகர்புற மக்களை சந்திக்கும் பயணமாக மட்டும் இல்லாமல், கிராமப்புற மக்களையும் சந்திக்கும் பயணமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்திய மக்களுக்கு அரசு செய்துள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் எனவும், மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து எடுத்து சொல்ல வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அமைச்சர்கள், இன்று தொடங்கி அடுத்த 7 நாள்கள் வரை ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். பின்னர், வரும் 24-ம் தேதி மீண்டும் டெல்லி திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

மோடி அமைச்சரவைக் கூட்டம்
மோடி அமைச்சரவைக் கூட்டம்
Representational Image

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உலக நாடுகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மத்திய அமைச்சர்களின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு