Published:Updated:

`சாகவேண்டும் என வருபவர்களை என்ன செய்வது?!’ - சர்ச்சையான உ.பி முதல்வரின் பேச்சு #CAA

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கலவரம் குறித்து அம்மாநில முதல்வர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, கடந்த டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். காவல்துறை தரப்போ, நாங்கள் ஒரு தோட்டாவைக்கூட பயன்படுத்தவில்லை எனக் கூறுகின்றனர். போராட்டக்களத்தில் இருந்து நாட்டுத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் இன்றுவரை சர்ச்சையாக உள்ள நிலையில், இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்
போராட்டம்

சட்டமன்றத்தில் பேசிய யோகி, ``போலீஸாரின் தோட்டாக்களுக்கு யாரும் பலியாகவில்லை. கலவரக்காரர்களின் தோட்டாக்களுக்குதான் அவர்கள் பலியானார்கள். சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும். மக்களைச் சுட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒருவர் தெருக்களில் இறங்கும்போது, அவர் பலியாவார்; இல்லையென்றால் போலீஸார் பலியாவர்.

`போராடும்போதே யாரும் வரல... காலி பண்ணிட்டா?!' - கேள்வி எழுப்பிய ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

அசாதி (சுதந்திரம்) என்ற கோஷங்கள் போராட்டத்தில் எழுப்பப்படுகின்றன. என்ன அசாதி, இங்கு நாம் ஜின்னாவின் கனவுகளை நோக்கி பணியாற்ற வேண்டுமா அல்லது காந்தியின் கனவை நோக்கி பணியாற்ற வேண்டுமா? டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, காவல்துறையினர் செய்த பணிக்காக அவர்கள் பாராட்டப்பட வேண்டும். அதன்பின் மாநிலத்தில் எந்தக் கலவரமும் ஏற்படவில்லை.

போராட்டம்
போராட்டம்

எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நான் எப்போதும் ஜனநாயக ரீதியில் நடக்கும் போராட்டங்களை ஆதரிப்பவன். ஜனநாயகத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு யாராவது ஜனநாயகத்தைத் தூண்டினால், அவர்களது பாணியிலேயே பதிலடி கொடுக்கப்படும்” என்று கூறியுள்ளது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு