Published:Updated:

25 குழந்தைகளைச் சிறைப்பிடித்தவரின் பிள்ளையைத் தத்தெடுத்த உ.பி போலீஸ்!

ஆபரேஷன், சுபாஷ் பதம்
ஆபரேஷன், சுபாஷ் பதம் ( Photo - Live Hindustan )

"குழந்தைக்கான மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்தும் எங்கள் துறையின் பொறுப்பு. நல்ல கல்வி நிச்சயம் தரப்படும்" - உ.பி காவல்துறை.

னது வீட்டினுள் 25 குழந்தைகளைப் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடித்து மிரட்டியவரை உ.பி பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவரின் பெண் குழந்தையைத் தங்களில் ஒருவர் தத்தெடுத்து வளர்க்கப்போவதாகக் காவல்துறை கூறியிருப்பது, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`நள்ளிரவில் வந்த மர்மநபர்கள்; போராட்டக் களத்தில் பதற்றம்!’- ஜாமியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
ஆபரேஷன்
ஆபரேஷன்
நன்றி: பிபிசி

உத்தரப்பிரதேசம் ஃபரூகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பதம் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. சுபாஷ், ஒரு கொலை வழக்கில் கைதாகிப் பிணையில் வெளிவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சுபாஷ் பதம், தன் குழந்தைக்குப் பிறந்தநாள் எனக் கூறி, அண்டை வீட்டுக் குழந்தைகளையும் சில பெண்களையும் கடந்த 30-ம் தேதி தன் வீட்டுக்கு அழைத்துள்ளார். அதையேற்று அவர்களும் சுபாஷ் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது திடீரென சுபாஷ், துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டி, வீட்டினுள்ளேயே அடைத்திருக்கிறார். குழந்தைகளின் கூச்சல் கேட்ட அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவலளித்துள்ளனர். காவல்துறை வந்து சமாதானம் செய்தும் வழிக்கு வராத சுபாஷ், காவல்துறையை நோக்கி சரமாரியாகச் சுடவும் தொடங்கியுள்ளார். சில மணிநேரம் முயன்றுபார்த்த காவல்துறையினர், பிறகு தேசிய பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தேசிய பாதுகாப்புப் படையினர், இரவு முழுக்க 8மணி நேர போராட்டத்துக்குப் பின், சுபாஷை சுட்டுக் கொன்றனர். இந்த ஆபரேஷனில், பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்ட யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தக் குற்றத்துக்கு உடந்தையாய் இருந்ததாகக் கூறப்பட்ட சுபாஷின் மனைவி ரூபியை பொதுமக்களே கொன்றனர்.

ஆபரேஷன்
ஆபரேஷன்
Twitter
`ஆண் குழந்தை ஆசை; கர்ப்பிணி நாடகம்!' -மெரினாவில் பலூன் வியாபாரி குடும்பத்தைப் பதறவைத்த இளம்பெண்

பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்ட குழந்தைகள், சில பெண்கள் என 24 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக்கிய காவல்துறைக்கு, 10 லட்ச ரூபாயைப் பரிசாக அறிவித்திருக்கிறது, யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு.

சுபாஷ் - ரூபி தம்பதியின் ஒரு வயதே ஆன பெண் குழந்தை மட்டும் கேட்பாரின்றி அந்த வீட்டில் இருந்தது. மேலும், சுபாஷ்- ரூபியின் உடல்களை வாங்கிக்கொள்ள இருவரின் உறவினர்களும் மறுத்துள்ளனர்.

காவல்துறை தரப்பில் கூறும்போது, ``சுபாஷுக்கு மனநலக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம். சுபாஷின் தங்கை, அம்மா ஆகியோரிடமும் ரூபியின் குடும்பத்திடமும் பேசினோம். யாரும் உடல்களை வாங்குவதற்கு முன்வரவில்லை. முடிந்தவரையிலும் காத்திருப்போம். அவர்கள் வாங்காதபட்சத்தில், இரண்டு உடல்களுக்கும் இறுதிச்சடங்கு நடத்தப்படும்" என்றனர்.

`ஆறாம் மாதத்தில் பிரசவம்; 340 கிராம்  எடை; குடலில் துளை!' - உயிர்பிழைத்த அதிசயக் குழந்தை
சடலம்
சடலம்
நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

கிராமத்துத் தலைவர் கூறுகையில், ``குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்பதால், ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் இவர்களோடு நெருங்கியதே இல்லை. நட்பு வட்டமும் இவர்களுக்கு அவ்வளவாக இல்லை. மேலும், சுற்றியிருக்கும் கிராமத்தினர் தங்கள் மயானத்தில் இந்த உடல்களைத் தகனம்செய்ய அனுமதி மறுத்துவருகின்றனர்" என்றிருக்கிறார்.

கான்பூர் ஐஜி மோஹித் அகர்வால் கூறுகையில்,``இந்தக் குழந்தைக்கு பெற்றோர் இருவரின் குடும்பமும் பொறுப்பேற்க மறுக்கின்றன. எவரேனும் பொறுப்பெடுத்துக்கொள்வதானால் சரி. இல்லையெனில், எங்கள் துறையைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி யாரிடமாவது இந்தக் குழந்தையை ஒப்படைத்து வளர்ப்போம்.

Vikatan

மேலும், எங்கள் பொறுப்பில் இருக்கும்வரை இந்தக் குழந்தைக்கான மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் எங்கள் துறையின் பொறுப்பு. குழந்தைக்கு நல்ல கல்விக்கான தளம் நிச்சயம் அமைத்துத் தரப்படும்" என்று உறுதியளித்திருக்கிறார்.

காவல்துறையினரை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு