Published:Updated:

உ.பி: கணவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 பரமாரிப்புத் தொகை! - மனைவிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

தீர்ப்பு
தீர்ப்பு

அரசு ஓய்வூதியதாரரான அந்தப் பெண், மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.12,000 பெற்றுவருவதால், பிரிந்து வாழும் அவருடைய கணவருக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாகப் பிரிந்துவாழும் கணவருக்கு மாதந்தோறும் பராமரிப்புத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், பல ஆண்டுகளாக, தான் மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான தனது மனைவியிடமிருந்து மாதந்தோறும் பராமரிப்புத் தொகை பெற்றுத் தர வேண்டும் எனவும் குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்து திருமணச் சட்டம், 1955-ன்படி ஓய்வூதியம் பெற்றுவரும் தனது மனைவி, மாதாந்தர பராமரிப்புத் தொகை அளிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

தீர்ப்பு
தீர்ப்பு

இந்து திருமணச் சட்டம் 1955-ன் விதிகளின்படி, கணவன் தாக்கல் செய்திருந்த மனுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, முஸாஃபர்நகர் குடும்பநல நீதிமன்றம், இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை அன்று தீர்ப்பு வழங்கியது.

`டிக்டாக் காதல்; திடீர் திருமணம்; கருக்கலைப்பு!’ -சாதியைக் காரணம் காட்டி விரட்டப்பட்ட சிறுமி

தீர்ப்பில், அரசு ஓய்வூதியதாரரான அந்தப் பெண், மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.12,000 பெற்றுவருவதால், பிரிந்து வாழும் தனது கணவருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருமணம்
திருமணம்
Representational Image

இந்து திருமணச் சட்டம் 1955-ன் கீழ் விவாகரத்துக்குப் பிறகு கணவன், மனைவிக்கு உதவித் தொகை கோர உரிமையிருக்கிறது. 1955-ம் ஆண்டு, மே மாதம் 18-ம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்து திருமணச் சட்டம், பல்வேறு பழைய நடைமுறைகளுக்கு முடிவு கட்டியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு