Published:Updated:

`ஏழைகளின் குரல்; சேவை செய்வதில் வாக்குவாதம்’ - உ.பி பெண் பத்திரிகையாளர் தற்கொலை

ரிஸ்வானா பத்திரிகையாளர்
ரிஸ்வானா பத்திரிகையாளர்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதற்கு சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த சமிம்தான் காரணம் எனவும் கடிதம் எழுதிவைத்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், வாரணாசியில் உள்ள ஹர்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் ரிஸ்வானா தபசும். இவர் கடந்த 4-ம் தேதி காலை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சமிம் நோமானிதான் தன் மரணத்துக்குக் காரணம் என்றும் இறப்புக் கடிதம் எழுதிவைத்திருந்துள்ளார். தொடர்ந்து சமிம் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தூக்கு
தூக்கு
மாதிரிப் புகைப்படம்

ரிஸ்வானாவின் குடும்பம் மிகப் பெரியது அவருக்கு 2 சகோதரிகள் மற்றும் 3 சகோதரர்கள் உள்ளனர். இவர் பனாரஸ் இந்தி பல்கலைக்கழகத்தில் இதழியல் பி.ஜி முடித்துள்ளார். ரிஸ்வானா தி வயர், தி பிரின்ட், தி குயிண்ட் போன்ற பல ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். ஏழை மக்களுக்குக் குரல் கொடுத்துப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் நாட்டில் நடக்கும் பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் வெளியில் கேட்கப்படாத குரலாக ரிஸ்வானாவின் குரல் (கட்டுரை) இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ரிஸ்வானா பற்றி தி குயிண்ட் ஊடகத்திடம் விரிவாகப் பேசியுள்ளார் அவரது சகோதரர் முகமது அஸிம், “ ரிஸ்வானா, இந்த உலகத்தில் பத்திரிகை பணியை விட வேறு எதையும் விரும்பியிருக்க மாட்டாள். எப்போதுமே அவர் காலை 9 மணிக்குத்தான் தூங்கி எழுவார். சம்பவம் நடந்த அன்றைய நாள் 10 மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை. நாங்கள் பலமுறை அவர் பெயரைச் சொல்லி அழைத்தோம். அப்போதும் எந்தப் பதிலும் இல்லை. பின்னர் ரிஸ்வானாவின் போனைத் தொடர்பு கொண்டோம் எடுக்கவில்லை. இறுதியாக 10-15 நிமிடங்கள் கதவைத் தட்டினோம், அந்த கணமே எங்கள் அனைவரது மனதிலும் அச்சம் தொற்றிக்கொண்டது.

சமிம் நோமானி
சமிம் நோமானி

கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத அந்தச் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. ரிஸ்வானாவின் அறையிலிருந்த ஒரு பைப்பில் தன் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இருந்தார். அவரை பார்த்ததும் என் பெற்றோர் முதலில் கூறிய வார்த்தை ‘என் மகளை கீழே இறக்குங்கள்’ என்பதுதான். பிறகு அவர்கள் எதுவுமே பேசவில்லை, அழுதுகொண்டே இருந்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சமிம் நோமனி, ரிஸ்வானாவை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் அதை மறுத்த ரிஸ்வானா, தன் பணிகள்தான் முக்கியம் எனத் தெரிவித்துவிட்டார். அதன் பிறகு தன் செயலுக்காக சமிமும் ரிஸ்வானாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். எங்கள் ஊரில் ஏழை மக்கள் நிறைய பேர் உள்ளனர். அப்படி, பசியால் தவிக்கும் ஏழைக் குழந்தைகள், மக்களின் பசியைப் போக்குவதற்காக சஞ்சா சன்க்ரிடி மஞ்ச் என்ற அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் ரேஷன் பொருள்களைப் பெற்று இல்லாத மக்களுக்கு வழங்கும் சேவையைச் செய்து வந்தார் ரிஸ்வானா.

அரிசி மூட்டைகள்
அரிசி மூட்டைகள்
மாதிரிப் புகைப்படம்

என் சகோதரியால் பல குடும்பங்கள் உணவு உண்டு வந்தனர். அதே அறக்கட்டளையில் சமிமும் தன்னார்வலராகப் பணியாற்றி வந்தார். இந்த லாக்டௌவுன் நேரத்திலும் அறக்கட்டளை மூலம் பலருக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. எங்கள் பகுதியில் இருக்கும் ரேஷன் பொருள்களை வேறு பகுதிக்கு விநியோகிக்க வேண்டும் என சிலரை சமிம் அனுப்பிவைத்தார். இதனால் அவர்களுக்கும் என் சகோதரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முடிந்த பிறகுதான் அவரின் தற்கொலைச் சம்பவம் நடந்தது. என் சகோதரி தற்கொலை செய்துகொண்டதற்கு உண்மையான காரணம் சமிம் கூறினால் மட்டுமே தெரியும்.

கேரளாவிலேயே மிகப்பெரிய பங்களாவைக் கட்டிய தொழிலதிபர்! - துபாயில் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

‘இந்தக் கடுமையான லாக்டௌன் நேரத்தில் எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு குழந்தை கூட பசியால் உயிரிழக்கக் கூடாது. அப்படி இறந்தால் நானும் இறந்துவிட்டதாக அர்த்தம்’ என என் சகோதரி அடிக்கடி கூறிவந்தார். ஏழை மக்களுக்காகச் சேவை செய்த அவருக்கு இறுதியில் மரணம் மட்டுமே பரிசாகக் கிடைத்தது” என வருத்தம் தெரிவித்துள்ளார் ரிஸ்வானாவின் சகோதரர்.

News credit : The Quint

அடுத்த கட்டுரைக்கு