Published:Updated:

உ.பி: காட்டுக்குள் தற்கொலை செய்துகொண்ட 17 வயது மாணவி, ஆசிரியர்... காரணம் என்ன?

தூக்கு - தற்கொலை

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியரும், மாணவியும் ஒரு காட்டுக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், ரசூல்பூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளியின் 40 வயதான ஆசிரியருக்கும், பள்ளியில் பயின்றுவந்த மாணவிக்கும் (17) இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் பள்ளியில் பரவத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பள்ளியில் பணியாற்றிவந்த ஆசிரியரும், மாணவியும் செப்டம்பர் 3-ம் தேதியிலிருந்து காணாமல்போயிருக்கின்றனர். தன்னுடைய மகளைக் காணவில்லை என அந்த மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

உ.பி: காட்டுக்குள் தற்கொலை செய்துகொண்ட 17 வயது மாணவி, ஆசிரியர்... காரணம் என்ன?

இந்த நிலையில், இது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு காட்டுக்குள்ளிருருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டுபிடித்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று இரண்டு சடலங்களை மீட்டெடுத்தனர். அதன் பிறகு கைப்பற்றப்பட்ட இரண்டு சடலங்களும் காணாமல்போன ஆசிரியர், மாணவியின் சடலங்கள் எனத் தெரியவந்தது. சம்பவ இடத்தில் தற்கொலைக்கான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.