Published:Updated:

மஞ்சள் காமாலையால் அவதியுற்ற தம்பி; தங்கள் கல்லீரலை தானமளித்து காப்பாற்றிய சகோதரிகள்!

கல்லீரல்
கல்லீரல்

மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து சகோதகரிகளிடமிருந்து குறிப்பிட்ட பகுதி கல்லீரல் வெட்டி நீக்கப்பட்டு அதை சிறுவனுக்குப் பொருத்தினார்கள்.

தம்பியின் உயிரைக் காப்பாற்ற உடன் பிறந்த சகோதரிகள் இருவரும் கல்லீரலை தானம் கொடுத்த நிகழ்வு பலருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளது. தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் ஒரே நேரத்தில் கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் பெற்றோர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் நகரைச் சேர்ந்த அக்ஷட் குப்தா என்ற 14 வயது சிறுவன் 6 வாரங்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை
பெண் வயிற்றில் சத்தமின்றி வளர்ந்த 22 கிலோ கட்டி; நீக்கிய அரசு மருத்துவர்கள்; கட்டிக்கு காரணம் என்ன?

பரிசோதனையில் சிறுவனுக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

மஞ்சள் காமாலை தீவிரமடைந்து கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு சிறுவனின் வயிற்றில் நீர் சேரத் தொடங்கியுள்ளது. இதனால் திடீரென்று 10 கிலோ உடல் எடை அதிகரித்துள்ளது. மேலும் மூச்சுத்திணறல், வயிறு வீக்கம், பதற்றம் போன்ற தீவிர அறிகுறிகளும் தென்பட்டன. தம்பிக்கு கல்லீரல் தானம் அளிக்க டெல்லியில் வசித்து வந்த 22 வயதான அவரின் அக்கா பிரிரெனா தயாராக இருந்தார்.

ஆனால் அவரிடமிருந்து கல்லீரலில் ஒரு பகுதியை தானம் பெற்றாலும் அது போதுமானதாக இருக்காது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் கல்லீரல் தான துறையின் தலைவர் மருத்துவர் அர்விந்தர் சொயின் கூறுகையில், ``வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நோயாளியின் உடல் எடையில் 0.8 முதல் 1% சதவிகிதம் எடை அளவுக்கு தானம் பெற்ற கல்லீரலைப் பொருத்த வேண்டும். அக்ஷட்டின் உடல் எடை 74 கிலோவிருந்து 92 கிலோவாக அதிகரித்ததால் சகோதரியிடமிருந்து தானம் பெறும் கல்லீரலானது சிறுவனின் எடையில் 0.5 முதல் 0.55 சதவிகிதம் தான் இருக்கும் என்பதால் அது போதுமானதாக இல்லை" என்று தெரிவித்தார்.

Liver
Liver

சிறுவனின் நிலையை அறிந்த 29 வயதான மூத்த சகோதரி நேகா, தானும் கல்லீரல் தானமளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து இத்தாலியிலில் வசித்த நேகா உடனடியாக இந்தியா வந்து சேர்ந்தார்.

``கல்லீரல் தானம் அளிப்பதைப் பற்றி நான் மிகவும் பயந்து, பதற்றத்துடன்தான் இருந்தேன். மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை நடப்பதை விளக்கி எங்களுடைய அப்பாவிடம் சம்மதம் வாங்குவதும் பெரும் சவாலாக இருந்தது. ஆனால் என்னுடைய தங்கை மிகவும் உற்சாகமாக அறுவை சிகிச்சைக்குத் தயாரானார். அவருடைய உற்சாகம்தான் எனக்கும் உந்துதலாக அமைந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் என்னுடைய தம்பியின் வேதனையைப் பார்த்தபோது என் கடமையாக இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதன் மூலம் என்னுடைய அன்பை அவனுக்கு காண்பிக்க விரும்பினேன்" என்கிறார் நேகா.

இருவரிடம் தானம் பெற்று ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது என்பது மிகவும் அரிதான அறுவை சிகிச்சை என்பதால் கூடுதல் பதற்றம் எல்லாரிடமும் காணப்பட்டது. மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சகோதகரிகளிடமிருந்து குறிப்பிட்ட பகுதி கல்லீரலை வெட்டி நீக்கி அதை சிறுவனுக்குப் பொருத்தினார்கள். 15 மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது மூவரும் நலமாக உள்ளனர்.

Surgery (Representational Image)
Surgery (Representational Image)
Vikatan

``என்னுடைய மூன்று பிள்ளைகளும் எனக்குத் திரும்ப கிடைத்துவிட்டனர். இதற்கு மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன்" - மூவரும் வீடு திரும்பிய நிலையில் அவர்களின் அம்மா பேசிய வார்த்தைகள் இவை.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு