Published:Updated:

கொரோனா: `அதிக உயரம்; புற ஊதா கதிர்கள்’ - லடாக்கில் குறைந்த வைரஸ் பரவலுக்கு என்ன காரணம்?

லடாக்
லடாக்

லடாக் பகுதி கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் இருப்பதால் அங்கு கொரோனா பரவல் குறைந்த அளவில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது போலவே எல்லைப் பகுதியான லடாக்கிலும் வைரஸ் பரவல் உள்ளது. அங்கு கடந்த நான்கு மாதங்களில் 1,327 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,067 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர் மீதமுள்ள 254 பேர் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பாதிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவரும் வென்டிலேட்டர் சிகிச்சை பெறவில்லை என்பது கூடுதல் சிறப்பு.

கொரோனா
கொரோனா

லடாக்கில் மிகக் குறைந்த அளவிலான வைரஸ் பரவலுக்கு அது, கடல் மட்டத்திலிருந்து 5,000 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் இருப்பதுதான் காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கனடாவின் கியூபெக்கின் பல்கலைக்கழக இருதயவியல் மற்றும் சுவாசவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 வைரஸ் அதிக உயரத்தில் குறைந்துள்ளதா என்பது தொடர்பான ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் உயரமான பகுதிகளில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா : `இது முதல் அலைதான்; இன்னும் பெரிதாக வரப்போகிறது!’ - WHO எச்சரிக்கை

இதன் ஆய்வறிக்கையில், `3,000 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் வாழும் மக்களுக்கு நோய்த் தொற்றின் தாக்கம் குறைவாக உள்ளது. இதற்கு அங்குள்ள அதிக உயரச் சூழல், மக்களின் வாழ்வியல் முறைகள், வறண்ட காலநிலை, பகல் மற்றும் இரவுகளுக்கு இடையேயான வெப்பநிலையில் கடுமையான மாற்றம், காற்றின் குறைந்த அடர்த்தி, அதிக புறஊதா கதிர்வீச்சு மக்களின் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ ஆகியவற்றின் பிணைப்புகளில் மாற்றங்களை உருவாக்கும் திறன் இவை அனைத்தும் சேர்ந்து வைரஸ் உயிர்வாழும் காலத்தைக் குறைத்து அதன் பரவலையும் குறைக்கிறது’ என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

லடாக்
லடாக்

இதுதான் லடாக்கிலும் நிகழ்வதாகக் கூறப்பட்டுள்ளது. அங்கு நோயின் மீட்பு விகிதம் 83 சதவிகிதமாக உள்ளது. இது தேசிய நோய் மீட்பின் சராசரி விகிதமான 64.24 சதவிகிதத்தைவிட கணிசமாக அதிகமாகும். ``லடாக்கில் நோய் மீட்பு விகிதம் அதிகமாக இருப்பது நல்ல விஷயம். நாங்கள் பார்க்கும் நோயாளிகள் அனைவருக்கும் குறைந்த அறிகுறிகளே உள்ளன. எங்களிடம் வென்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகளும் இல்லை என லே பகுதியில் இருக்கும் எஸ்.என்.எம் மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் தாஷி தின்லாஸ் கூறியுள்ளார்.

`குடும்ப உறுப்பினர்களால் அதிகம் பரவிய கொரோனா!' - அதிர்ச்சி கொடுத்த ஆய்வு
அடுத்த கட்டுரைக்கு