Published:Updated:

`நண்பனின் மரணம்; பொருளாதாரப் பிரச்னை!' - 40 நாடுகளின் போட்டியாளர்களை வென்ற இந்திய நடனக்குழு

'V- Unbeatable'
'V- Unbeatable' ( instagram )

தன் நண்பனின் மரணத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக 'V- Unbeatable' என்று தன் நண்பனின் முதல் எழுத்தை தன் குழுவின் முதல் எழுத்தாக சேர்த்து களம் இறங்கினர்.

அமெரிக்காவில் நடந்த டேலன்ட் ஷோ `America's Got Talent'. இதில் உலகம் முழுவதும் இருந்து 40 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்றுக்கொண்ட மும்பை அணி வெற்றிவாகை சூடி அசத்தியிருக்கிறது.

'V- Unbeatable'
'V- Unbeatable'
instagram

மும்பையைச் சேர்ந்த பிரபல டான்ஸ் குழு `Unbeatable'. பொருளாதாரத்தில் பின்தங்கிய 29 இளைஞர்கள் கொண்ட இந்தக் குழு கடந்த ஆண்டும் `America's Got Talent ' போட்டியில் கலந்துகொண்டு நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு மீண்டும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்ற இந்தக் குழு தொடக்கத்தில் இருந்தே ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவந்தது.

அரை இறுதிச்சுற்றின்போது இந்தக்குழுவில் இருந்த 22 வயது, விகாஸ் விபத்து காரணமாக உயிரிழந்தார். அவரின் இறப்புக்குப் பின், சற்று பின்தங்கிய நிலையில் இருந்த `Unbeatable' குழுவினர் தன் நண்பனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக `V- Unbeatable' என்று தன் நண்பனின் முதல் எழுத்தை தன் குழுவின் முதல் எழுத்தாகச் சேர்த்து களம் இறங்கினர்.

View this post on Instagram

Yes we achieved worlds biggest title and our hard work pays off, After our day night struggle and 12 to 14 hours rehearsal, we made it our country proud , our brothers Vikas dream has fulfil, we made our parents proud, and it’s all happen because of people love support and their blessings, thank you so much super audience for your precious vote🙏 #vunbeatable #support #agt #nbc #agtchampions #win #title #proud #instagram #goodvibes #achieve #feelinggood #audience #usa #newyork #london #uae #postoftheday #instadaily #thankyou #dance choreographer and director @omchauhan7825 choreographer @rohitfictitious @agt @nbc @nbcworldofdance @simoncowell @howiemandel @aleshaofficial @heidiklum @juleshough @gabunion @starplus @remodsouza @dharmesh0011 @rahuldid @vibhorratna @paulmarshal @deshvegas @punitjpathakofficial @raghavjuyal

A post shared by V.UNBEATABLE DANCE GROUP (@v.unbeatable_official_india) on

`America's Got Talent ' ன் இறுதிச்சுற்று நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் `பேட்ட' படத்தில் வெளியான `மரணம் மாஸ் மரணம்' பாடலுக்கு நடனம் ஆடி எல்லோருடைய கவனத்தையும் வாக்கையும் பெற்று முதலிடத்தைத் தட்டிச்சென்றது. 'V- Unbeatable' குழுவின் வெற்றிக்கு ரன்வீர் உட்பட பாலிவுட் நடிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து `V- Unbeatable' குழுவினர் வழங்கியுள்ள பேட்டியொன்றில் ``எங்கள் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் பொருளாதாரம் சார்ந்து எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். நடனம் எங்களுக்கான அடையாளத்தை உருவாக்கப்போவதில்லை என்ற ஏளனங்கள் எங்கள் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறியிருந்தது. இதில் எங்களின் நண்பனின் மரணம் எங்களை உளவியல்ரீதியாகவும் பாதித்தது.

டாப் 10 சிறந்த சி.இ.ஓ-க்கள் பட்டியலில் இந்தியர்கள் 3 பேர்!- யார் அவர்கள்?
'V- Unbeatable'
'V- Unbeatable'
instagram

எல்லா சூழலிலும் இந்தப் போட்டியில் நாங்கள் எங்களை நிரூபிக்க கிடைத்த கடைசி வாய்ப்பாகவே நினைத்தோம். இரவு பகலாகப் பயிற்சி மேற்கொண்டோம். இந்த வெற்றி கனவுபோல இருக்கிறது. இது வெற்றி மட்டுமல்ல, எங்களின் அடையாளம். இந்த வெற்றியைக் கொண்டாட எங்களின் நண்பன் இல்லை. அவனுக்கு எங்களின் வெற்றியைச் சமர்ப்பிக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு