Published:Updated:

சகோதரி மரணம்... இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரங்களில் பணிக்குத் திரும்பிய காவலர்!

காவலர்
காவலர்

காவலர் பணி என்பது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியும், பல தியாகங்கள் புரிந்தும் மேற்கொள்ளும் பணி.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு இரண்டாவது முறையாக மே 3-ம் தேதி வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இரவு பகல் பாராது பெருந்தொற்றின் அச்சத்தைப் பொருட்படுத்தாது காவல்துறையினர் சேவையாற்றி வருகின்றனர். பெரும்பாலான காவல்துறையினர் கடுமையான மன இறுக்கத்துடன் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்கள் செய்யும் பல நெகிழச்சியான சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலத்தின் வதோதரா காவல் நிலையத்தின் துணை சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செயல் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

வதோதரா காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் அம்பாலா மொராஜிபாய். கொரோனா வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாண்யன் பகுதியில் அமைந்துள்ள மூத்த குடிமக்கள் காப்பகத்தில் இருக்கும் முதியவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் முறையாக கிடைக்கின்றனவா என ஆய்வு மேற்கொண்டு, குறைகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்துவருகிறார்.

சகோதரி மரணம்... இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரங்களில் பணிக்குத் திரும்பிய காவலர்!

இதனிடையே, அம்பாலாவின் சகோதரி கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக திடீரென உயிரிழக்க, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சில மணி நேர விடுப்பு மட்டுமே எடுத்துக்கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

`இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு சகோதரனாக என் சகோதரிக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டு, குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்துவிட்ட நிலையில், நாட்டில் இக்கட்டான சூழல் நிலவுவதால் காவலராகிய எனது பங்களிப்பும் முக்கியம் என்பதை உணர்ந்து சில மணி நேரங்களில் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டேன்' என அம்பாலா தெரிவித்துள்ளார்.

சகோதரி மரணம்... இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரங்களில் பணிக்குத் திரும்பிய காவலர்!

இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், `காவலர் பணி என்பது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியும், பல தியாகங்கள் புரிந்தும் மேற்கொள்ளும் பணி. குடும்பத்தில் ஒருவரின் இழப்பு நிகழ்ந்திருந்தாலும் கூட, காவல்துறையினருக்கு நாட்டின் சேவைதான் முக்கியம் என்பதை உணர்ந்து இறுதிச்சடங்கு முடிந்தவுடன் உடனே பணிக்குத் திரும்பியுள்ளது காவல்துறையினரின் பொறுப்புணர்வை பறைசாற்றுகிறது’ என்றார்.

இச்சம்பவம் அறிந்தபின் பேசிய வதோதரா பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமாரி, `காவல் துறையினர் பணியின்போது குடும்பத்தைப் பற்றி நினைக்காமல் சேவையாற்றி வருகின்றனர். குடும்பத்தைப் பற்றி சிந்திக்காமல், சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் காவலர் அம்பாலா பணிக்குத் திரும்பியது காவல்துறையினர் குடும்பத்தைக் காட்டிலும், நாட்டுக்கு சேவை புரிவதைதான் முதன்மையான பணியாக நினைக்கின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு