Published:Updated:

‘தற்கொலைதான், இருந்தாலும் காத்திருக்கோம்’-சித்தார்த்தாவின் உடற்கூறாய்வு அறிக்கை குறித்து போலீஸ்

சித்தார்த்தா

சித்தார்த்தாவின் இறப்பில் உள்ள மர்மம் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அவரின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

‘தற்கொலைதான், இருந்தாலும் காத்திருக்கோம்’-சித்தார்த்தாவின் உடற்கூறாய்வு அறிக்கை குறித்து போலீஸ்

சித்தார்த்தாவின் இறப்பில் உள்ள மர்மம் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அவரின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Published:Updated:
சித்தார்த்தா

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 'காஃபி டே' உரிமையாளர் சித்தார்த்தா, கடந்த திங்கள்கிழமை சிக்மங்களூருவில் உள்ள தன் காபி தோட்டத்துக்குச் சென்றுவிட்டு, மாலையில் மங்களூரு திரும்பிக்கொண்டிருக்கும்போது, திடீரெனக் காணாமல் போனார். நேத்ராவதி ஆற்றுக்கு அருகில் அவர் காணாமல் போனதால், ஆற்றில் குதித்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதல் பணிகள் தொடங்கிய அடுத்த 24 மணி நேரத்தில், அவரது உடல் நேத்ராவதி ஆற்றங்கரையில் ஒதுங்கியது.

சித்தார்த்தாவின் உடல்
சித்தார்த்தாவின் உடல்
Twitter/@ItsDavidMaina

இதையடுத்து, சித்தார்த்தாவின் திடீர் மரணத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடங்கின. அதன் முடிவில், கடன் பிரச்னைகள் தாங்க முடியால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. சித்தார்த்தாவின் இறப்பு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இறந்த சித்தார்த்தாவின் உடலில் நடத்தப்பட்ட முதல்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சித்தார்த்தாவின் உடலில் சில மாற்றங்கள் உள்ளன. பொதுவாக, இறந்த ஒருவரின் உடல் அழுகும்போது, இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்வது இயற்கைதான். அவரின் உடலில் சந்தேகத்துக்கிடமாக எந்த மாற்றமும் நிகழ்வில்லை. சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்ட தடயங்கள் மட்டுமே உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றிப் பேசியுள்ள மங்களூரு துணை காவல்துறை ஆணைய ஹனுமந்தராயா ( Hanumantharaya), “ சித்தார்த்தா இறப்பு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. விசாரணை பற்றிய விவரங்களை உரிய நேரத்தில் உரிய அதிகாரிகள் வழங்குவார்கள். சித்தார்த்தா தண்ணீரில் மூழ்கித் தான் உயிரிழந்தார் என்பது உறுதியாகியுள்ளது. அதற்கு ஆதாரமாக, அவரின் நுரையீரலில் அதிகப்படியான தண்ணீர் இருந்தது தெரியவந்துள்ளது.

காஃபி டே சித்தார்த்தா
காஃபி டே சித்தார்த்தா

தற்போது கிடைத்துள்ள முதல் கட்ட உடற்கூறாய்வு சோதனை அறிக்கையில், சித்தார்த்தாவின் உடல் பற்றி சந்தேகப்படும்படியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இருந்தாலும், இரண்டாவது சோதனையின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட அமிலங்களைவைத்து தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவர்களிடமிருந்து அறிக்கை வருவதற்கு சற்று காலதாமதம் ஆகும்” என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism