Published:Updated:

கூட்டத்தில் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட தீபிகா... வைரலாகும் வீடியோ... நெட்டிசன்கள் கேட்கும் கேள்வி!

Deepika ( Photo: Instagram / Varinder Chawla )

முகக்கவசமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் தீபிகா மாட்டிக்கொண்ட நிகழ்வு, நேற்றைய தினத்திலிருந்து சோஷியல் மீடியாவெங்கும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

கூட்டத்தில் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட தீபிகா... வைரலாகும் வீடியோ... நெட்டிசன்கள் கேட்கும் கேள்வி!

முகக்கவசமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் தீபிகா மாட்டிக்கொண்ட நிகழ்வு, நேற்றைய தினத்திலிருந்து சோஷியல் மீடியாவெங்கும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

Published:Updated:
Deepika ( Photo: Instagram / Varinder Chawla )

முகக்கவசமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் தீபிகா மாட்டிக்கொண்ட நிகழ்வு, நேற்றைய தினத்திலிருந்து சோஷியல் மீடியாவெங்கும் வைரலாகிக்கொண்டிருக்கிறது. நேற்று இரவு டின்னர் சாப்பிடுவதற்காக, மும்பை புறநகர்ப் பகுதியொன்றில் இருக்கிற ஹோட்டலுக்கு வந்த தீபிகாவை பெண்கள் கூட்டமொன்று சூழ்ந்துகொண்டது.

Deepika Padukone
Deepika Padukone

கூடவே சில புகைப்படக்காரர்களும். பெரும்பான்மை செலிபிரிட்டிகளுக்கே உரிய பொறுமையுடனும் சிரித்த முகத்துடன் அந்த கும்பலை சமாளித்திருக்கிறார் தீபு. ஆனால், அவரை சூழ்ந்துகொண்ட பெண்கள், அவர்களிடம் இருக்கிற டிஷ்யூ நாப்கின்களை தீபிகாவிடம் விற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். அதில் ஒரு சிலர், தீபிகாவின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக அவருடைய கையில் இருந்த சிவப்பு நிற ஹேண்ட் பேகை பிடித்து இழுத்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிலைமை மோசமாவதைப் புரிந்துகொண்ட தீபிகாவின் மெய்க்காப்பாளர்கள், அவருடைய ஹேண்ட் பேகை மீட்டு, அவரையும் வேகமாக காருக்குள் உட்கார வைத்திருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து, நெட்டிசன்கள் 'வேர் ஈஸ் யுவர் ஃபேஸ் மாஸ்க்' என்று கேட்டு தீபிகாவை ட்ரோல் செய்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் தீபிகாவும் அவர் ஹேண்ட் பேகும் சிக்கித் தவித்த வீடியோவை இதுவரை பார்த்திருக்கிறார்கள்.

Deepika
Deepika

அதில் பலர், 'இவ்வளவு நளினமாக, பொருத்தமாக டிரெஸ் செய்துகொண்டு வரத் தெரிந்த தீபிகாவுக்கு ஃபேஸ்மாஸ்க் போட்டுக்கொண்டு வரத் தெரியாதா' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். சிலர் மட்டும், 'ஹோட்டலுக்குள் இருந்து காருக்குள் ஏற வருகிறார். அதற்குள் மாஸ்க் எங்கே என்று கேட்டால் எப்படி' என்று தீபிகாவுக்காக வாதாடியிருக்கிறார்கள். இன்னும் சிலர் 'அந்த ஹோட்டலில் பாதுகாப்பு சரியாக இல்லை. அதனால், இப்படியொரு கூட்டத்துக்குள் தீபிகா மாட்டிக்கொண்டார்' என்று ஹோட்டல் நிர்வாகத்தைத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism