Published:Updated:

தீபாவளி கொண்டாட்டம்: மகளிர் கல்லூரியில் சுவரேறி குதித்து அத்துமீறிய மாணவர்கள்! - போலீஸ் விசாரணை

பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் ( ட்விட்டர் )

மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி கல்லூரி மாணவர்கள் சுவர் ஏறி உள்ளே நுழைந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மிரண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (14-ம் தேதி) தீபாவளி நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். கல்லூரியில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, கல்லூரியின் நுழைவுவாயில் மூடப்பட்டது. அந்த சமயத்தில், அருகிலிருக்கும் ராம்ஜாஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த மாணவர்கள் ஆபாசமாக கோஷங்கள் எழுப்பியதாகவும், அதன்பிறகு, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கின்றனர். இதையடுத்து, டெல்லி மகளிர் ஆணையமும் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.