Published:Updated:

`இன்னும் ஒரு வழிதான் இருக்கு..!’ - உள்நாட்டில் முடிவுக்கு வந்த விஜய் மல்லையாவின் சட்டப் போராட்டம்

விஜய் மல்லையா ( AP )

``இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் மல்லையாவை நாடு கடத்த முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் முடிய 28 நாள்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.”

`இன்னும் ஒரு வழிதான் இருக்கு..!’ - உள்நாட்டில் முடிவுக்கு வந்த விஜய் மல்லையாவின் சட்டப் போராட்டம்

``இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் மல்லையாவை நாடு கடத்த முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் முடிய 28 நாள்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.”

Published:Updated:
விஜய் மல்லையா ( AP )

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா மதுபான ஆலை, விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இவர் பொதுத்துறை வங்கியில் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கிவிட்டு அதைத் திரும்ப செலுத்த முடியாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார். இதையடுத்து கடனைத் திருப்பி செலுத்தாதது மற்றும் சட்ட விரோதமான பண பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுப்பட்டதன் அடிப்படையில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் விஜய் மல்லையா மீது வழக்குகளைப் பதிவு செய்தனர். இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கும் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

இங்கிலாந்தில், விஜய் மல்லையா இந்தியா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பிறகு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றமானது 2018-ம் ஆண்டு மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் மல்லையா மேல்முறையீடு செய்தார். ஆனால், லண்டன் உயர் நீதிமன்றமானது மல்லையாவின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. எனினும், விடாத விஜய் மல்லையா இந்த வழக்கை இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் இருக்க அவருக்கான கடைசி வாய்ப்பாக இந்த மனுத்தாக்கல் இருந்தது. ஆனால், இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை நேற்று தள்ளுபடி செய்தது. இதனால், மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னிடமிருந்த அனைத்து சட்ட வாய்ப்புகளையும் இழந்த விஜய் மல்லையா இன்னும் 28 நாள்களில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் மல்லையாவை நாடு கடத்த முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் முடிய 28 நாள்கள் ஆகும் என்றார். உள்நாட்டில் அவருடைய சட்ட நடவடிக்கைகளுக்கு முடிவு ஏற்பட்டாலும், ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது சாத்தியம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளான இந்த விஷயம் அடுத்த கட்டத்துக்கு நகர்வதால் இந்திய அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தீர்ப்பு வருவதற்கு முன்னதாக விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில், ``கொரோனா வைரஸ் பாதிப்பால் நெருக்கடியில் உள்ள பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள். அரசாங்கம் விரும்பும் அளவுக்கு ரூபாய் நோட்டுகளை அச்சிட முடியும். ஆனால், என்னைப் போன்ற சிறிய பங்களிப்பாளர் முழு கடனையும் திரும்ப செலுத்துகிறேன் எனத் தெரிவித்தும் புறக்கணிக்கப்பட வேண்டுமா? நான் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய அனைத்துப் பணத்தையும் நிபந்தனையின்றி எடுத்துக்கொண்டு என்மீதான அனைத்து வழக்குகளையும் முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.