Published:Updated:

Viral Video: தண்டவாளத்தில் பெண்; வேகமாகக் கடந்து சென்ற ரயில்... கேஷுவலாக போன் பேசியபடி சென்ற பெண்!

ரயில் தண்டவாளம் ( ட்விட்டர் )

ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்துக்கொண்டு தப்பித்து, பதற்றமின்றி தொடர்ந்து போன் பேசிய வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் போன் பேசிக்கொண்டே செல்ல, ரயில் வந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பினார். அதன் பிறகு எதுவும் நடக்காததுபோல் சர்வ சாதரணமாக செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டே தண்டவாளத்திலிருந்து எழுந்து சென்ற வீடியோ காட்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவை ஐ.பி.எஸ் அதிகாரி திபன்சு கப்ரா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகிவருகிறது. மேலும், அந்தப் பெண் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism