Published:Updated:

`வாட்ச்மேனா கூட ஆகமுடியாதுன்னாங்க; ஆனா இப்போ..!'- திரைப்படமாகும் மாற்றுத்திறனாளி ஸ்ரீகாந்த் வாழ்க்கை

ஸ்ரீகாந்த் பொல்லா ( Instagram Photo: @srikanthbollaofficial )

``என்னைப் பார்ப்பவர்கள், `அவர் பார்வைத்திறன் இல்லாதவர். பரிதாபத்துக்குரியவர்' என்று நினைப்பார்கள். நான் யார், என்ன செய்கிறேன் என்பதை விளக்கத் தொடங்கும் தருணத்தில் எல்லாமே மாறிவிடும்" - ஸ்ரீகாந்த் பொல்லா

`வாட்ச்மேனா கூட ஆகமுடியாதுன்னாங்க; ஆனா இப்போ..!'- திரைப்படமாகும் மாற்றுத்திறனாளி ஸ்ரீகாந்த் வாழ்க்கை

``என்னைப் பார்ப்பவர்கள், `அவர் பார்வைத்திறன் இல்லாதவர். பரிதாபத்துக்குரியவர்' என்று நினைப்பார்கள். நான் யார், என்ன செய்கிறேன் என்பதை விளக்கத் தொடங்கும் தருணத்தில் எல்லாமே மாறிவிடும்" - ஸ்ரீகாந்த் பொல்லா

Published:Updated:
ஸ்ரீகாந்த் பொல்லா ( Instagram Photo: @srikanthbollaofficial )

இந்தியாவின் பார்வையற்ற முதல் இளம் முதன்மைச் செயல் அதிகாரியான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கைக் கதை இந்தியில் திரைப்படமாகவுள்ளது. 31 வயதில் ரூ.480 கோடி (48 மில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள நிறுவனத்தைக் கட்டியெழுப்பியுள்ளார் ஸ்ரீகாந்த் பொல்லா. விழிச்சவால் உடையவர் என்பதால், சிறு வயதில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்பது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டது. அதை எதிர்த்து ஆந்திர மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்று அதே படிப்பைப் படித்துக்காட்டியவர் ஶ்ரீகாந்த் பொல்லா.

ஸ்ரீகாந்த் பொல்லா
ஸ்ரீகாந்த் பொல்லா
Instagram Photo: @srikanthbollaofficial

ஶ்ரீகாந்த் பொல்லாவுக்கு, பொறியாளர் ஆக வேண்டும் என்பதே எப்போதும் கனவு. ஆனால், அதற்கான வாய்ப்பை அடைவதே மிகக் கடினமாக இருந்ததாகத் தெரிவிக்கிறார். ஐ.ஐ.டி-யில் சேர்ந்து படிக்க வேண்டுமென்பது தன் பெருங்கனவாக இருந்தபோதும் தன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது வாழ்வில் மிகப்பெரிய சவாலான காலகட்டம் என்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` `நம் சொந்த வீட்டுக்குக்குக் கூட நீ வாட்ச்மேனாக வேலை செய்ய முடியாது. ஒரு தெருநாய் உள்ளே நுழைந்தால்கூட உன்னால் பார்க்க முடியாது' என என் பெற்றோரே கூறியிருக்கின்றனர். பலரும் என்னை தலையணை வைத்து அழுத்திக் கொன்று விடுமாறு என் பெற்றோரிடம் கூறுவார்களாம்" என்று பகிர்ந்துகொள்ளும் ஸ்ரீகாந்த் பொல்லா, தன் மேற்படிப்பை அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில் படித்து முடித்து, `பொல்லன்ட் இன்ஸ்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனத்தை ஹைதராபாத்தில் நிறுவினார்.

ஸ்ரீகாந்த் பொல்லா
ஸ்ரீகாந்த் பொல்லா
Instagram Photo: @srikanthbollaofficial

பேக்கேஜிங் நிறுவனமான இது, பனை ஓலைகளில் இருந்து சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலான பொருள்களையும் உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 480 கோடி ரூபாய். தன் சொந்த அனுபவத்தின் காரணமாக, தன்னைப்போல பல மாற்றுத் திறனாளிகள், மற்றும் மனநல குறைபாடுள்ளவர்களுக்கு தன் நிறுவனத்தில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் பொல்லா.

கொரோனா பெருந்தொற்றுநோய்க்கு முன், அந்நிறுவனத்தின் 500 ஊழியர்களில், 36% பேர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல குறைபாடுள்ளவர்களாக இருந்தனர். மூன்று ஆண்டுகளுக்குள் அவரது நிறுவனப் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கக்கூடிய உலகளாவிய IPO (Initial public offering) ஆக மாறும் என்று அவர் நம்புகிறார். இந்நிறுவனத்தின் பங்குகள் ஒரே நேரத்தில் பல சர்வதேச பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகாந்த் பொல்லா
ஸ்ரீகாந்த் பொல்லா

கடந்த ஆண்டு, தனது 30-வது வயதில் ஸ்ரீகாந்த் உலகப் பொருளாதார மன்றத்தின் `இளம் உலகளாவிய தலைவர்கள்' (2021) பட்டியலில் இடம்பிடித்தார்.

``ஆரம்ப நாள்களில் என்னை பார்ப்பவர்கள், `அவர் பார்வைத் திறன் இல்லாதவர், பரிதாபத்துக்குரியவர்' என்று நினைப்பார்கள். நான் யார், என்ன செய்கிறேன் என்பதை விளக்கத்தொடங்கும் தருணத்தில் எல்லாமே மாறிவிடும்" என்று கூறிச் சிரிக்கும் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை இந்தியில் சினிமாவாக தயாரிக்கப்பட உள்ளது. இவருக்கு பாலிவுட்டிலிருந்து நடிப்பதற்கான அழைப்புகளும் வருகிறதாம்!