Published:Updated:

`கிடைக்கும் கொஞ்சம் நேரத்தில் கதகளி கற்றுக்கொண்டேன்!' - திருவிழாவில் நடனமாடிய வயநாடு கலெக்டர் கீதா

`தமயந்தி' வேடத்தில் கலெக்டர் கீதா

வயநாட்டில் உள்ள வள்ளியூர் காவு கோயில் திருவிழாவில் பங்கேற்ற ஆட்சியர் கீதா, தமயந்தி வேடம் அணிந்து தனது முதல் கதகளி நடனத்தை மேடையில் அரங்கேற்றம் செய்தார். நேர்த்தியான கதகளி ஒப்பனையுடன்‌ மேடையில் அரங்கேற்றம் செய்த ஆட்சியர் கீதாவுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வருபவர் கீதா. சிறுவயது முதலே நடனக்கலை மீது அதீத ஆர்வம் கொண்டவரான‌ இவர், பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் பல கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடனத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆட்சியர் பணிக்கு வந்த பின்பும், கிடைக்கும் நேரத்தில் நடனப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் கீதா. மேலும், கேரள‌ மக்களின் பாரம்பர்ய‌ நடனங்களில் ஒன்றான கதகளி நடனத்தைக் கற்று வந்தார்.

`தமயந்தி' வேடத்தில் கலெக்டர் கீதா
`தமயந்தி' வேடத்தில் கலெக்டர் கீதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், வயநாட்டில் உள்ள வள்ளியூர் காவு கோயில் திருவிழாவில் பங்கேற்ற ஆட்சியர் கீதா, தமயந்தி வேடம் அணிந்து தனது முதல் கதகளி நடனத்தை மேடையில் அரங்கேற்றம் செய்தார். நேர்த்தியான கதகளி ஒப்பனையுடன்‌ மேடையில் அரங்கேற்றம் செய்த வயநாடு ஆட்சியர் கீதாவுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவரது கதகளி நடன வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கதகளி அரங்கேற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கீதா, ``கதகளி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அதற்கான நேரம் ஒதுக்க முடியவில்லை.

வயநாடு கலெக்டர் கீதா
வயநாடு கலெக்டர் கீதா

கிடைக்கும் கொஞ்சம் நேரத்தில் முழு கவனத்தையும் செலுத்தி கதகளியைக் கற்றுக்கொண்டேன். சக கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நடனக்கலை நமக்கு நல்ல இளைப்பாறுதலாக இருக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism