Published:Updated:

`கொரோனா நெருக்கடியை திருப்புமுனையாக மாற்றுவோம்!’ - பிரதமர் மோடி நம்பிக்கை

பிரதமர்  மோடி
பிரதமர் மோடி

``நமது நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு வரும் அனைத்துப் பொருள்களையும் இந்தியாவில் எவ்வாறு தயாரிக்க வேண்டும், ஏற்றுமதியாளராக எப்படி மாற வேண்டும் என்ற திசையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.”

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது இந்த ஊரடங்கில் பல தளர்வுகளையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் திட்டங்களை பொருளாதார நிபுணர்கள் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இந்திய வர்த்தக சபையின் (ஐ.சி.சி) 95-வது ஆண்டு தின விழாவில் இன்று உரையாற்றினார்.

பொருளாதாரம்
பொருளாதாரம்

பிரதமர் மோடி காணொளி மூலமாக விழாவில் பேசுகையில், ``உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகின்றன. அதேபோல, இந்தியாவும் கொரோனா வைரஸூக்கு எதிராகப் போராடி வருகிறது. ஆனால், இந்த நெருக்கடியான சூழலில் வைரஸைத் தவிர்த்து பல பிரச்னைகள் எழுந்துள்ளன. நாட்டின் சில பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்குதல், பூகம்பங்கள், சூறாவளிகள், எண்ணெய்க் கிணறு விபத்து, வெள்ளப்பெருக்கு என நாடு பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சவால்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். நம்முடைய திடமான நடவடிக்கைகளும் உறுதியும் மட்டுமே எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது. நாம் இந்த நெருக்கடியை நாட்டின் திருப்புமுனையாக மாற்ற வேண்டும். சுயசார்புடைய இந்தியாவை உருவாக்குவதற்கான நேரம் இது” என்று கூறியுள்ளார்.

`உலகப்போரைப் போலவே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என உலகம் மாறிவிட்டது!’ - பிரதமர் மோடி

பழைமைவாத முறையில் பொருளாதாரத்தை அணுகுவதற்கான நேரம் இல்லை இது என்றும் தைரியமான முடிவுகளை எடுக்கவும் தைரியமாக முதலீடுகளைச் செய்வதற்குமான நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார். ``நமது நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு வரும் அனைத்துப் பொருள்களையும் இந்தியாவில் எவ்வாறு தயாரிக்க வேண்டும், ஏற்றுமதியாளராக எப்படி மாற வேண்டும் என்ற திசையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``உற்பத்தி துறையில் வங்காளத்துக்கு இருக்கும் வரலாற்று சிறப்புகளை நாம் புதுப்பிக்க வேண்டும். `வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ அதை இந்தியா நாளை நினைக்கும்’ என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை உத்வேகமாகக் கொண்டு அனைவரும் இணைந்து ஒன்றாக முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், ``ஐ.சி.சி நாட்டின் வளர்ச்சிப் பாதையில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

`சீனாவுடனான எல்லைப் பிரச்னை... அமெரிக்க போராட்டங்கள்!’ -முக்கியத்துவம் பெற்ற மோடி - ட்ரம்ப் உரையாடல்
அடுத்த கட்டுரைக்கு