Published:Updated:

`நாம் கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்!’ -சுகாதாரத்துறை இணைச் செயலர்

அகர்வால்
அகர்வால்

இந்திய மக்கள் கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தேசிய அளவில் சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை 39,834 -ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,981-ஆகவும் உள்ளது. மேலும், வைரஸால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,846 -ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

இந்நிலையில் நேற்று வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால், ‘மொத்த இந்தியாவிலும் 216 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை. அதேபோல் ஒரு சில மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த அதிகரிப்பைத் தடுத்து கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசுடன் மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

``கொரோனா விஷயத்தில் அமெரிக்கா, இத்தாலியைவிட இந்தியா பெஸ்ட்!'' - சி.பி.ஆர் சான்றிதழ்

அனைத்து மாநிலங்களிலும் வைரஸ் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்காக பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்காக மட்டும் கிட்டத்தட்ட 5,200 ரயில் பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் தயார் செய்து கொடுத்துள்ளது. கடந்த பத்து நாள்களில் மட்டும் இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

லால் அகர்வால்
லால் அகர்வால்

அதே நேரத்தில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கைத் தளர்த்துவது தொடர்பாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது தொடர்பாகவும் நாம் பேசி வருகிறோம். இந்தச் சூழலில் நாம் வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

`உதவும் வெப்பநிலை?; தினமும் 9,000 அழைப்புகள்..!' -கொரோனா வைரஸை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது?

கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ ரீதியிலான அறிவுரைகள், செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது ஆகியவற்றை நாம் சரியாகப் பின்பற்றினாலே இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டாமல் இருக்கும். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை நாம் அன்றாடச் செயல்பாடுகளில் அத்தியாவசிய மாற்றங்களாகக் கொண்டுவரவேண்டும்” எனப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு