Published:Updated:

மஹுவா மொய்த்ரா டீக்கடையில் தேநீர் தயாரித்த வீடியோ; சமூக வலைதளங்களில் `சாய்வாலா’ கமென்ட்கள்!

மஹுவா மொய்த்ரா எம்.பி.
News
மஹுவா மொய்த்ரா எம்.பி.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா திடீரென சாலையோரம் இருந்த டீக்கடைக்குச் சென்று தேநீர் தயாரித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த வீடியோவுடன் அவர் பகிர்ந்திருந்த வார்த்தைகள், பலரையும் கமென்ட் செய்ய வைத்தன.

மஹுவா மொய்த்ரா டீக்கடையில் தேநீர் தயாரித்த வீடியோ; சமூக வலைதளங்களில் `சாய்வாலா’ கமென்ட்கள்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா திடீரென சாலையோரம் இருந்த டீக்கடைக்குச் சென்று தேநீர் தயாரித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த வீடியோவுடன் அவர் பகிர்ந்திருந்த வார்த்தைகள், பலரையும் கமென்ட் செய்ய வைத்தன.

Published:Updated:
மஹுவா மொய்த்ரா எம்.பி.
News
மஹுவா மொய்த்ரா எம்.பி.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. இவர் தனது சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனது தொகுதியில் சாலையோரம் இருக்கும் டீக்கடைக்கு சென்று மஹுவா மொய்த்ரா, தேநீர் தயாரிக்கிறார். தேநீரில் சர்க்கரையை எடுத்துப்போட்டு கலக்குகிறார். அவருக்கு டீக்கடைக்காரர் உதவி செய்கிறார். அவரைச் சுற்றி ஏராளமானோர் நின்று கொண்டிருக்கின்றனர்.

தனது இந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் மஹுவா மொய்த்ரா, `எனது கையால் தேனீர் தயாரிக்க முயன்றேன். இது என்னை எங்கு கொண்டுசெல்லுமோ யார் அறிவார்...’ என்று குறிப்பிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் பலரும், பிரதமர் நரேந்திர மோடியை கருத்தில்கொண்டு இந்த வீடியோவை மஹுவா மொய்த்ரா வெளியிட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

பிரதமர் எப்போதும் தன்னை சாய்வாலா (டீக்கடைக்காரர்) என்று சொல்வதுண்டு. `நாட்டிற்கு ஒரு சாய்வாலா போதும். இன்னொரு சாய்வாலாவை இந்த நாடு தாங்குமா என்று தெரியாது’ என்று சோஷியல் மீடியாவில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். `மஹுவா மொய்த்ரா மேடம், நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகும் எண்ணத்தில் இருக்கிறார்’ என்று இன்னொருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மஹுவா மொய்த்ரா, மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அந்த மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் 60 நாள்களில் 10 கோடி மக்களை சந்திக்கும் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது. இப்பிரசாரத்தின் போதுதான் மஹுவா மொய்த்ரா தெருவோர டீக்கடையில் இறங்கி தேநீர் தயாரித்திருக்கிறார்.

மாநில அரசு தேர்தலை சந்திக்க, பள்ளிக் குழந்தைகளுக்கு சாப்பாட்டுடன் சிக்கன் குழம்பு மற்றும் பழங்கள் கொடுக்க சமீபத்தில் முடிவு செய்தது. ஆனால் இந்த சிக்கன் குழம்பு வெறும் நான்கு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.