Published:Updated:

`அமெரிக்கா வழியை நாமும் பின்பற்ற வேண்டும்!’ -தீவிரவாதத்தை ஒழிக்க பிபின் ராவத் தரும் யோசனை

'தீவிரவாதிகளுக்கு உதவி செய்யும் நாடுகள் இருக்கும் வரை தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது' என முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

பிபின் ராவத்
பிபின் ராவத் ( ANI )

`தீவிரவாதிகளுடனான போர் ஒருநாளும் முடியப்போவதில்லை. அதை முடிக்க அவர்களின் வேரைத் தெரிந்துகொள்ள வேண்டும்' என முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இன்று, டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிபின் ராவத்
பிபின் ராவத்
ANI

“ சில நாடுகள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வரை உலகிலிருந்து தீவிரவாதிகளை அழிக்க முடியாது. அந்த நாடுகள், தீவிரவாதிகளுக்கு நிதி, ஆயுதம் போன்றவற்றை வழங்கி அவர்களை முகமூடிகளாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்தச் சுழலில், நாம் தீவிரவாதத்துடன் சேர்ந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.

9/11 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கர்கள் தீவிரவாதத்தை எப்படிக் கையாண்டார்களோ அதேமுறையை நாமும் பின்பற்ற வேண்டும். 'தீவிரவாதத்துக்கு எதிராக உலகளாவிய போர் தொடுப்போம்' என்று அவர்கள் முழங்கினார்கள். அப்படிச் செய்தால் மட்டுமே தீவிரவாதிகளைக் கண்டறிய முடியும்.

பிபின் ராவத்
பிபின் ராவத்
ANI

தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் நாடுகளைக் கண்டறிந்து, அவர்கள்மீது குறிவைக்க வேண்டும். நிதி நடவடிக்கைக் குழு மூலம் அந்த நாடுகளை கறுப்புப் பட்டியலில் இணைப்பது சிறந்த வழியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அந்த நாடுகளை ராஜதந்திரரீதியாகத் தனிமைப்படுத்துவதும் முக்கியம்” என்று கூறியுள்ளார்.

``ராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்!" - முப்படைகளின் தலைமைத் தளபதி... யார் இந்த பிபின் ராவத்?

இந்திய ராணுவப்படைத் தளபதியாக இருந்த பிபின் ராவத், சமீபத்தில் முப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் முப்படைகளின் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள முதல் அதிகாரி இவர்தான். இந்தப் பொறுப்பின்மூலம் முப்படைகளுக்கும் தேவையான ஆயுதக் கொள்முதல், போர் நடவடிக்கை, முப்படைகளின் செயல்களைக் கண்காணிப்பது, பாதுகாப்புத்துறை அமைச்சருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

பிபின் ராவத்
பிபின் ராவத்
ANI

இன்று இவர் பேசும்போது, பாகிஸ்தானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை . ஆனால், பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக இந்தியா பல காலங்களாகத் தெரிவித்துவருகிறது. எனவே, இன்று பிபின் ராவத்தும் அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.