Published:Updated:

₹64,000 கோடியில் மோடி தொடங்கி வைத்த மருத்துவ உள்கட்டமைப்புத் திட்டம்; எதற்காக?

பிரதமர் மோடி
News
பிரதமர் மோடி

கிராமங்களிலும் நகரங்களிலும் பொது மருத்துவ உள்கட்டமைப்பில் இருக்கும் ஓட்டைகளை சரிசெய்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இதற்காக 64,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பயன்பெறக்கூடிய மருத்துவ உள்கட்டமைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அவரது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து ஆயுஷ்மான் பாரத் மருத்துவ உள்கட்டமைப்புத் திட்டத்தை நேற்று தொடங்கியிருக்கிறார்.

தேசிய சுகாதாரப் பணிகளுடன் இணைந்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் நாடு முழுவதும் மருத்துவ உள்கட்டமைப்பை உயர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் பொது மருத்துவ உள்கட்டமைப்பில் இருக்கும் ஓட்டைகளை சரிசெய்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இதற்காக 64,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

hospital (Representational Image)
hospital (Representational Image)
AP Photo / Rajanish Kakade

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டிய 10 மாநிலங்களில் 17,788 கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களும், மற்ற மாநிலங்களில் 11,024 நகர்ப்புற சுகாதார மையங்களும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இதன் மூலம் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கும் மாவட்டங்களில் தீவிர சிகிச்சை மையங்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கான மருத்துவமனை உருவாக்கப்படும். இதன் மூலம் மற்ற சுற்றுவட்டார மாவட்டங்களும் பயனடைய முடியும்.

நாடு முழுவதும் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் வலைத்தொடர்பு மூலம் அனைத்து மக்களும் எளிதாகத் தங்களின் நோயைக் கண்டறிவதற்கான வழிமுறைகளைப் பெறுவர். மேலும், ஒருங்கிணந்த பொது மருத்துவ ஆய்வுக்கூடங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மோடி
மோடி

இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு தேசிய சுகாதார நிறுவனம், தேசிய அளவிலான வைராலஜி நிறுவனங்கள் 4, உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய ஆராய்சித் தளம், உயிரியல் பாதுகாப்பு மூன்றாம் நிலை ஆய்வகங்கள் 9, தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் 5 ஆகியன அமைக்கப்படவிருக்கின்றன.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கிய மோடி அவரது தொகுதியான வாரணாசிக்கு 5,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்தார்.