Published:Updated:

ரூ.1.5 லட்சம் பென்சன், 7 அறைகள் கொண்ட பிரமாண்ட பங்களா - முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகள் இவைதான்!

ராம்நாத் கோவிந்த் தங்கவிருக்கும் 12 ஜன்பாத் பங்களா, டெல்லி

சோனியாவின் இல்லமான 10, ஜன்பத் என்பது இந்திய அரசியலின் முக்கியமான அட்ரஸ். அதன் அருகில் இன்னொரு முக்கிய முகவரியாக ராம்நாத் கோவிந்த் வீடு இருக்கப் போகிறது.

ரூ.1.5 லட்சம் பென்சன், 7 அறைகள் கொண்ட பிரமாண்ட பங்களா - முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகள் இவைதான்!

சோனியாவின் இல்லமான 10, ஜன்பத் என்பது இந்திய அரசியலின் முக்கியமான அட்ரஸ். அதன் அருகில் இன்னொரு முக்கிய முகவரியாக ராம்நாத் கோவிந்த் வீடு இருக்கப் போகிறது.

Published:Updated:
ராம்நாத் கோவிந்த் தங்கவிருக்கும் 12 ஜன்பாத் பங்களா, டெல்லி
இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகையான டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறும் முதல் பழங்குடிப் பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக இருக்கும் அந்தக் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து ஓய்வுபெற்று வெளியேறும் ராம்நாத் கோவிந்த் எங்கே போவார்? அவருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

ராம்நாத் கோவிந்த்- திரௌபதி முர்மு
ராம்நாத் கோவிந்த்- திரௌபதி முர்மு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னாள் ஜனாதிபதிக்கு அரசு பங்களா, கார், பென்ஷன், இலவசப் பயணம் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் உண்டு.

அதன்படி டெல்லியில் மையமான பகுதியில் பிரமாண்டமான பங்களா ஒன்று ராம்நாத் கோவிந்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டுக்கு அருகில் ஜன்பத் சாலையில் 12-ம் எண் கொண்ட வீடு இது. முன்னாள் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் சுமார் 20 ஆண்டு காலம் இங்குதான் வசித்தார். அவருக்குப் பின் அவர் மகன் சிராக் பாஸ்வான் இந்த வீட்டில் குடியிருக்க அனுமதி கேட்டார். அமைச்சர்களுக்கான வீடு சாதாரண எம்.பி-க்களுக்கு தரப்படுவதில்லை என்பதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் சிராக் பாஸ்வான் இந்த வீட்டை காலி செய்தார்.

12 ஜன்பத் பங்களா, டெல்லி
12 ஜன்பத் பங்களா, டெல்லி

அதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்துக்காக இந்த வீடு புதுப்பிக்கப்பட்டது. ராம்நாத்தின் மகள் சுவாதி இந்தப் பணிகளை மேற்பார்வை செய்தார். ராம்நாத் ஓய்வுபெறும் நேரத்திலேயே அவரின் பொருட்கள் இந்த வீட்டுக்கு வந்துவிட்டன.

சோனியாவின் இல்லமான 10, ஜன்பத் என்பது இந்திய அரசியலின் முக்கியமான அட்ரஸ். அதன் அருகில் இன்னொரு முக்கிய முகவரியாக ராம்நாத் கோவிந்த் வீடு இருக்கப் போகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏழு அறைகள் கொண்ட பங்களா இது. இதுதவிர பணியாளர்கள் தங்குவதற்கு தனி குவாட்டர்ஸ் உண்டு. ஜனாதிபதியாக இதுவரை மாதம் ஐந்து லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய ராம்நாத் கோவிந்த், இனி மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் பென்ஷன் வாங்குவார்.

இதுதவிர ஒரு தனிச் செயலர், கூடுதல் தனிச் செயலர், ஒரு தனி உதவியாளர் மற்றும் இரண்டு பியூன்கள் அவருக்கு உதவியாக பணி செய்வார்கள். அலுவலக செலவுகளுக்காக என்று தனியாக மாதம் 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் பிரதமர் மோடி
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் பிரதமர் மோடி

இது மட்டுமில்லை, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சவிதா கோவிந்துக்கு தனியாக மாதம் 30 ஆயிரம் ரூபாய் அலுவலக செலவுகளுக்காக என்று வழங்கப்படும்.

இந்த பங்களாவுக்கு மின் கட்டணம், தண்ணீர் வரி செலுத்தத் தேவையில்லை. இரண்டு டெலிபோன்கள், ஒரு மொபைல் போன், இன்டர்நெட் கனெக்‌ஷன் ஆகியவை கட்டணமின்றி வழங்கப்படும்.

இதுவரை குண்டு துளைக்காத மெர்சிடெஸ் பென்ஸ் காரில் வலம்வந்த ராம்நாத் கோவிந்துக்கு இனி அரசு கார் ஒன்று வழங்கப்படும். அரசு டிரைவரும் பணி செய்வார். இதுவரை என்.எஸ்.ஜி படையினர் அவருக்குப் பாதுகாப்பு தந்தனர். இனி டெல்லி போலீஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதி தன் வாழ்நாள் முழுக்க தரமான மருத்துவ சிகிச்சையைக் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். இந்தியா முழுக்க விமானத்திலும், முதல் வகுப்பு ரயில் பெட்டியிலும் கட்டணமின்றி பயணம் செய்யலாம். செல்லும் இடங்களில் அரசு இல்லங்களில் தங்கிக்கொள்ளவும் முடியும்.