Published:Updated:

`மாடுகளை உண்ணும் புலிகளுக்கு என்ன தண்டனை?' - கோவா சட்டமன்றத்தை அதிர வைத்த எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ
எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ

கோவாவிலுள்ள மகாதாயி வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த மாதம் தாய்ப் புலி மற்றும் அதன் மூன்று குட்டிகள் உள்ளூர்வாசிகளால் கொல்லப்பட்டது.

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புலிகளைப் பாதுகாக்க அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். புலிகள் கொல்லப்படுவது தொடர்பாக கோவா மாநில சட்டமன்றத்திலும் நேற்று விவாதம் நடந்துள்ளது. இந்த விவாதத்தில், அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மாடுகளை உண்ணும் புலிகளை தண்டிக்க வேண்டும் எனப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலி
புலி
Representational image

கோவாவிலுள்ள மகாதாயி வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த மாதம் தாய்ப் புலி மற்றும் அதன் மூன்று குட்டிகள் உள்ளூர்வாசிகளால் கொல்லப்பட்டது. இதுதொடர்பாக, கோவா மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் கேள்வியை எழுப்பினார்.

`அந்த ஒற்றைப் புலி எப்போது வரும் எனத் தெரியவில்லை!' -ஆடு, மாடு வேட்டையால் கதிகலங்கும் கூடலூர் மக்கள்

இதுதொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், ``உள்ளூர்வாசிகளின் கால்நடைகளை புலிகள் தாக்கியதால் அவர்கள் கொன்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் கால்நடைகளைப் பறிகொடுத்தவர்களுக்கு இன்னும் சில நாள்களில் நிவாரணம் அளிக்கப்படும்" என்றார்.

பிரமோத் சாவந்த்
பிரமோத் சாவந்த்

இந்த விவாதத்தில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சில் அலேமாவோ, ``மாடுகளை உண்ணும் புலிகளுக்கு என்ன தண்டனை? ஏனெனில், மனிதன் மாடுகளை உண்ணும்போது தண்டிக்கப்படுகிறான்" என்று கேள்வி எழுப்பினார். மேலும், ``வனவிலங்குகளைப் பொறுத்தவரை புலிகள் முக்கியம். மனிதர்களைப் பொறுத்தவரை மாடுகள் முக்கியம். அனைத்து அத்தியாயங்களிலும் மனிதர்களின் கருத்துகளை நிராகரித்துவிட முடியாது" என்றார்.

``பக்கத்துல புலி... ஆந்தையின் கோபம்... துரத்திய கரடி!" - வைல்ட்லைஃப் போட்டோகிராபரின் த்ரில் அனுபவம்
அடுத்த கட்டுரைக்கு