Published:Updated:

அமெரிக்க `ஏர் ஃபோர்ஸ் ஒன்'-க்கு இணையான வசதிகள்... பிரதமரின் புதிய விமானத்தில் என்ன ஸ்பெஷல்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரதமரின் புதிய விமானத்தில் என்ன ஸ்பெஷல்?!
பிரதமரின் புதிய விமானத்தில் என்ன ஸ்பெஷல்?!

அமெரிக்க அதிபர் பயணிக்கும் `ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தைப் பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். `Flying Oval office' என அழைக்கப்படும் இந்த விமானம் அதிலிருக்கும் சொகுசு வசதிகளுக்காகவும், பாதுகாப்பு வசதிகளுக்காகவும் பெயர்பெற்றது.

அதேபோன்ற உயர்ரக விமானத்தில்தான் இனி இந்தியப் பிரதமரும் ஜனாதிபதிகளும் பயணம் செய்யப்போகின்றனர்.

'ஏர் ஃபோர்ஸ் ஒன்
'ஏர் ஃபோர்ஸ் ஒன்
Wikipedia

இந்தியாவின் மிக முக்கியப் புள்ளிகள் (VVIP) பயணிப்பதற்கென செப்டம்பர் மாதத்திலிருந்து இரண்டு புதிய போயிங் 777-300 ER ரக விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த விமானங்கள் ஜூலை மாதமே அமெரிக்காவிலிருந்து வந்துவிடும் எனக் கடந்த அக்டோபர் மாதம் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கொரோனா பாதிப்புகள் காரணமாக இது செப்டம்பரில்தான் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது விமானமல்ல, பறக்கும் வெள்ளை மாளிகை... இந்தியா வரும் ட்ரம்ப்பின் 3 மாடி போயிங்747 #VikatanInfographics

கடந்த 25 வருடங்களாக இந்தியப் பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் போயிங் 747 ரக விமானத்திலேயே பயணம் செய்துவருகின்றனர். 2006-ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்த இரண்டு விமானங்களைத் தயாரித்து அனுப்பவுள்ளது. ஆனால் 2006-ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை விட இப்போது விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-2020 இடையிலான காலத்தில் மட்டுமே இதன் விலை $55.3 மில்லியன் அதிகமாகியுள்ளது. தற்போது இதன் விலை $375.5 மில்லியன். இந்த விமானம் ஏர் இந்தியா ஒன் (AI - 1) என்ற அடையாளத்துடனேயே பறக்கும். ஏர் இந்தியா ஒன் என்பது இந்திய நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் பயணிக்கிறார்கள் என்பதைக் குறிக்கும். 2018-ல் இந்த இரண்டு விமானமும் பயணிகள் விமானமாக இந்தியாவில் சில மாதங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்னும் மேம்படுத்தவும் மாற்றியமைக்கவும் இவை போயிங் நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

தற்போதைய ஏர் இந்தியா ஒன்
தற்போதைய ஏர் இந்தியா ஒன்

இதுவரை ஏர் இந்தியாவின் B747 விமானங்களை ஓட்டியது ஏர் இந்தியா பைலட்கள்தான். ஆனால் இரண்டு புதிய B777 விமானங்களையும் இந்திய விமானப்படையைச் சேர்ந்தவர்களே இயக்க உள்ளார்கள். இதனை ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் இந்தியா இன்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் (Air india engineering services limited, AIESL) பராமரிக்கும். போயிங்கின் தலைமையகமான ஃப்ளோரிடாவிலிருந்து இந்தியாவிற்கு இது கூடிய விரைவில் (செப்டம்பருக்குள்) வந்தடையும் என இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதை ஓட்டுவதற்கான பயிற்சியில் ஐந்து விமானப்படை பைலட்கள் ஈடுபட்டுள்ளனர். இது சொகுசாகவும் அதே நேரத்தில் மிகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். அமெரிக்க அதிபரின் `ஏர்ஃபோர்ஸ் ஒன்' விமானத்தைப் போன்றே இந்த விமானமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் Anti missile defense system, Large Aircraft Infrared Countermeasures (LAIRCM), SPS (self-protection suites) பாதுகாப்பு அறைகள் மற்றும் பிற பாதுகாப்பு வசதிகள் உண்டு. இவை இருப்பதால்தான் இதை இந்திய விமானப்படை இயக்கவுள்ளது. இதற்காக அமெரிக்காவிடமிருந்து $190 மில்லியனுக்கு இரண்டு பாதுகாப்பு அமைப்புகளை (defence systems) வாங்கவுள்ளது இந்தியா.

போயிங் 777
போயிங் 777

இதோடு கூடுதலாக கான்ஃபரென்ஸ் அறைகள், Wifi வசதி, மருத்துவ அவசரத்திற்கான பிரிவு எனப் பிற அம்சங்களும் உண்டு. அவசர நேரத்தில் நடுவானிலேயே இதற்கு எரிபொருள் நிரப்ப முடியும்.

ஒரே மூச்சில் உலகத்தை ஒரு ரவுண்டு அடித்துவரவல்லவை இந்த விமானங்கள். ஒரு மணிநேரத்துக்கு 900 கிலோமீட்டர் வேகம் வரை இது பயணிக்கும்.

அமெரிக்க `ஏர் ஃபோர்ஸ் ஒன்' 1100 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு CF6-80C2B1 ஜெட் இன்ஜின்களைக் கொண்டது அந்த விமானம்.

ஆனால் நம் பிரதமர் பயன்படுத்தவிருப்பது இரட்டை இன்ஜின்களால் (GE 90-115 BL) இயங்கக்கூடிய விமானமாகும். இன்ஜின்களின் மொத்த விலை 2011-ல் $110 மில்லியனாக இருந்தது. இப்போது இது இன்னும் கூட அதிகமாகி இருக்கும் என நம்பப்படுகிறது. இதுவரை அரசாங்கம் இதற்கென 5,552.08 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இனி வரும் காலங்களில் கூடுதலாக பராமரிப்புக்காக 2,900 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டிவரும். பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் இதில் முதன்மையாகப் பயணிப்பார்கள். இதற்கு அடுத்து இந்திய முக்கியப் புள்ளிகளும் இதில் பயணிப்பார்கள்.

ஏற்கெனவே இந்திய அரசாங்கம் ₹60,000 கோடி ரூபாய்க் கடனை அடைக்க ஏர் இந்தியாவை விற்க முடிவு செய்துள்ளது. கொரோனாவால் இந்த நேரத்தில் அது தள்ளிப்போடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு