Published:Updated:

கஞ்சா பயன்படுத்துவதில் உலகளவில் டெல்லி 3-வது இடம் - அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை #VikatanInfographics

Cannabis
Cannabis

உலகளவில் கஞ்சா பயன்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. 2018-ல் 38.26 மெட்ரிக் டன் கஞ்சா டெல்லியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனிதர்கள் பல்வேறு காரணங்களாகப் போதைப் பொருள்களைத் தேடிச் செல்கின்றனர். சிலர் பிரச்னைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும், சிலர் உடல் வலி மறக்கவும், இன்னும் சிலர் ஓய்வுக்காகவும். அவர்களில் பலரின் தேர்வு மது. மதுவுக்கு அடுத்தபடியாக, பலர் விரும்பும் போதைப் பொருள் கஞ்சா.

Cannabis
Cannabis

கஞ்சா பயன்படுத்துவதன் மூலம் தனி மனிதர்களுக்கும் சமூகத்துக்கும் பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்ததால், 1985-ம் ஆண்டில் இந்தியாவில் கஞ்சா பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கஞ்சாவைப் பயன்படுத்துவது சட்ட விரோதம் என்றாலும், பல்வேறு இடங்களில் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிகரெட், புகையிலை வடிவில் மட்டுமல்லாமல் ஐஸ்க்ரீம், சாக்லெட் போன்ற உணவுப்பொருள்களிலும் கஞ்சா கலக்கப்பட்டு மறைமுகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதைச் சாப்பிட்டால் மூளையில் குழப்பத்தை ஏற்படுத்தி தடுமாற்றத்தை உண்டாக்கும். அதனால், உடலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அதனால், அப்போதை தெளியும்வரை இயல்பு சூழலிலிருந்து விலகிவிடுவர்.

கஞ்சா
கஞ்சா

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில், கஞ்சா மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகில் சுமார் 23 நாடுகள் கஞ்சாவைப் சட்டபூர்வமாக விற்பனைசெய்ய அனுமதித்துள்ளன. புற்றுநோய், எய்ட்ஸ், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றிற்கு கஞ்சாவை மருந்தாகப் பயன்படுத்தும் பழக்கம் சில மருத்துவ முறைகளில் உண்டு. வலியைப் போக்குவதற்காக, மற்ற வலி நிவாரணிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த மாதம், அமெரிக்காவில் Lowell Farms: A Cannabis Cafe என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கடந்த 2018-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில்தான் அதிகளவில் கஞ்சா பயன்படுத்தியுள்ளதாக Cannabis Price Index அறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கையின்படி, 77.44 மெட்ரிக் டன் அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் கராச்சி உள்ளது. டெல்லி மூன்றாவது இடத்தில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2018-ல் மட்டும் 38.26 மெட்ரிக் டன் கஞ்சாவை டெல்லி மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல் 6-வது இடத்தில் மும்பை உள்ளது. மும்பைவாசிகள் 2018-ல் 32.38 மெட்ரிக் டன் கஞ்சாவைப் பயன்படுத்தியுள்ளனர்.

உலகளவில் கஞ்சா பயன்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. 2018-ல் 38.26 மெட்ரிக் டன் கஞ்சா டெல்லியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Cannabis Price Index 2018
Cannabis Infographics
Cannabis Infographics

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு கிராம் கஞ்சாவை வாங்குவதற்காக ஜப்பானின் டோக்கியோ நகர மக்கள் 2,348.30 ரூபாய் செலவிடுகின்றனர். உலகிலேயே அதிக விலை கொடுத்து கஞ்சா வாங்குபவர்கள் இவர்கள்தான். டெல்லியில் ஒரு கிராம் கஞ்சாவை 314.93 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். அதேபோல் கஞ்சா பயன்படுத்த 82.65 சதவிகித வரியை பல்கேரியா நாடு விதிக்கிறது.

Cannabis
Cannabis

உலகளவில் 15 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் போதைக்காகவே கஞ்சாவைப் பயன்படுத்துகின்றனர் என்பது வருத்தமான செய்தி. கஞ்சாவைப் பயன்படுத்தும்போது, அதன் புகை உடலுக்குள் சென்று மூளையின் செயல்பாட்டையும் மனநிலையையும் மாற்றுகிறது. மேலும், பலவீனமான நினைவாற்றலைக் கொடுப்பதுடன், யோசிப்பதில் பல்வேறு சிக்கலையும், மயக்க நிலைக்கும் தள்ளுகிறது. சிலருக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும். தலைவலி, மன அழுத்தம், சுவாசப் பிரச்னைகள், தொற்றுநோய் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, ஞாபக சக்தி குறைபாடு என பல்வேறு விதமான பாதிப்புகள் கஞ்சா புகைப்பதால் ஏற்படுகிறது. போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்களில் 60% பேர் போதை நோயாளிகளாகவே மாறிவிடுகிறார்கள்.

Cannabis
Cannabis

போதைப் பொருள்களால் சிறிதளவு நன்மை இருப்பதாகக் கருதப்பட்டாலும், குடும்பம், சமூக வாழ்க்கையைச் சீரழிக்கும் பாதிப்புகளே அதிகம்.

Shocking: தமிழ்நாட்டில் கஞ்சா சப்ளையாகும் திக் திக் ரூட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு