Published:Updated:

சசி தரூர் மனைவி மரணம் முதல் வாட்ஸ்அப் விவகாரம் வரை... சர்ச்சைகளும் அர்னாப் கோஸ்வாமியும்!

அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி

2006-ம் ஆண்டு `டைம்ஸ் நவ்' செய்தி சேனலில், செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கி, அந்த சேனலின் முக்கிய நெறியாளராகவும், பின்னர் செய்திப் பிரிவின் சிறப்பு ஆசிரியராகவும் பணி உயர்வு பெற்றார்.

`The Nation wants to know’ - என்ற வாக்கியத்தை அடிக்கடி உச்சரித்துப் புகழ்பெற்ற தொலைக்காட்சி நெறியாளர் அர்னாப்பின் வாட்ஸ்அப் உரையாடல்களை இன்று இந்தியா முழுவதும் தெரிந்துகொண்டிருக்கிறது. பால்கோட் தாக்குதல், பிரதமர் அலுவலகத் தொடர்பு என முக்கிய ரகசியங்களை வாட்ஸ்அப் மூலம், இந்தியாவில் டி.ஆர்.பி-யைக் கண்டறியும் நிறுவனமான BARC நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ பார்த்தோ தாஸ் குப்தாவுக்கு அனுப்பியிருக்கிறார் அர்னாப். அந்த வாட்ஸ்அப் உரையாடல்கள்தான் தற்போது இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்தி.

BARC முன்னாள் சி.இ.ஓ உடனான உரையாடல்; வெளியான 500 பக்க வாட்ஸ்அப் சாட்! - புதிய சிக்கலில் அர்னாப்
அர்னாப்
அர்னாப்

அர்னாப் கோஸ்வாமி யார்?

இந்தியாவிலுள்ள செய்தி சேனல் நெறியாளர்களில், முக்கிய முகமாக அறியப்படுபவர் அர்னாப் கோஸ்வாமி. 1996 முதல் 2006-ம் ஆண்டு வரை `என்.டி.டி.வி', `டெலிகிராப்' உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் பணிபுரிந்தார். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு `டைம்ஸ் நவ்' செய்தி சேனலில், செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கி, அந்த சேனலின் முக்கிய நெறியாளராகவும், பின்னர் செய்திப் பிரிவின் சிறப்பு ஆசிரியராகவும் பணி உயர்வு பெற்றார். 2016, நவம்பர் மாதத்தில் டைம்ஸ் நவ் சேனலிலிருந்து வெளியேறினார் அர்னாப்.

2017-ல் ரிபப்ளிக் டி.வி-யைத் தொடங்கினார் அர்னாப். இதற்கான நிதியுதவி எங்கிருந்து வந்தது. எத்தனை மொழிகளில் ரிபப்ளிக் டி.வி இயங்குகிறது என்பது குறித்து படிக்க, பின்வரும் லிங்க்கைக் க்ளிக் செய்யுங்கள் ----->> https://www.vikatan.com/social-affairs/controversy/what-is-happening-in-trp-scam-case-that-involved-arnab-goswamis-republic-tv

அர்னாப்
அர்னாப்

சர்ச்சையும் அர்னாப்பும்!

இந்தியப் பத்திரிகை, ஊடகத்துறையில் அதிக சர்ச்சைகளைச் சந்தித்தவர் அர்னாப்தான். சசி தரூர் மனைவியின் மரணம் குறித்த சர்ச்சை, பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு, போலிச் செய்திகள் குறித்த சர்ச்சை, பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் குறித்து செய்திகள், டி.ஆர்.பி சர்ச்சை எனத் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியவர் அர்னாப். இது பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொள்ள, கீழ்க்காணும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.

ரிபப்ளிக் டிவி: வீட்டுக்கு மாதம் ரூ.400; `இந்தியா டுடே' பகை - டி.ஆர்.பி விவகாரத்தில் என்ன நடக்கிறது?
அடுத்த கட்டுரைக்கு