Published:Updated:

ஏன் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப் படுகின்றன?

Tamilnadu tableau 2021 ( PIB India )

ஒவ்வோர் ஆண்டும், இப்படி சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மத்திய அரசு புறக்கணிப்பதும், அதைத்தொடர்ந்து எதிர்ப்புகள் எழுதுவதும் வாடிக்கையாக இருக்கிறது. ஏன் இந்தக் குழப்பங்கள்?

ஏன் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப் படுகின்றன?

ஒவ்வோர் ஆண்டும், இப்படி சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மத்திய அரசு புறக்கணிப்பதும், அதைத்தொடர்ந்து எதிர்ப்புகள் எழுதுவதும் வாடிக்கையாக இருக்கிறது. ஏன் இந்தக் குழப்பங்கள்?

Published:Updated:
Tamilnadu tableau 2021 ( PIB India )
Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!

டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்குபெற, தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப் பட்ட, அலங்கார ஊர்திக்கு (Tableau) மத்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், இப்படி சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மத்திய அரசு புறக்கணிப்பதும், அதைத்தொடர்ந்து எதிர்ப்புகள் எழுதுவதும் வாடிக்கையாக இருக்கிறது. ஏன் இந்தக் குழப்பங்கள்?

எப்படி தேர்வு செய்யப்படுகின்றன அலங்கார ஊர்திகள்?

குடியரசு தின அணிவகுப்புகள், அதற்கான ஏற்பாடுகள் அனைத்துமே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பொறுப்புதான்.

  • ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் வந்தவுடன், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் அமைச்சகங்கள், தேர்தல் ஆணையம் / நிதி ஆயோக் போன்ற பிற அமைப்புகள் என அனைவருக்கும், குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளுக்கான பரிந்துரைகளைக் கேட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகத்திலிருந்து கடிதம் போய்விடும்; பின்னர் அக்டோபர் மாதம் முதல் அவற்றைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும்.

  • இதற்கடுத்து, இவற்றைத் தேர்வு செய்ய மத்திய அரசின் சார்பில் ஓவியம், இசை, பண்பாடு, சிற்பம், கட்டடக்கலை எனப் பல்வேறு நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்.

  • முதலில் இந்தக் குழுவிடம், அலங்கார ஊர்திகளுக்கான ஓவியங்களைக் காட்டி, ஒப்புதல் வாங்க வேண்டும். இவர்கள் ஓகே சொன்னால், அடுத்து 3D மாடல். அதுவும் ஓகே ஆனால், அடுத்து அலங்கார ஊர்திகள் இறுதிப்பட்டியலில் இடம்பெறும்.

  • ஒவ்வோர் அலங்கார ஊர்தியும் அந்த மாநிலத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கிறதா, போதுமான கலைநயத்துடன் இருக்கிறதா, பிற ஊர்திகளுடன் ஒப்பிடும்போது தனித்து தெரிகிறதா எனப் பல்வேறு விஷயங்களை மனதில் வைத்தே இவற்றை நிபுணர்கள் தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் மெருகேற்றுவதற்கு பரிந்துரைகளையும் வழங்குவார்கள். எந்தக் கட்டத்தில் வேண்டுமானாலும், மாநிலங்களின் மாதிரிகள் நிராகரிக்கப்படலாம்.

  • ஒருவேளை, இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருந்தாலுமேகூட, நிபுணர்கள் குழுவுக்கு திருப்தி இல்லை எனில், அந்த ஊர்திகள் ஊர்வலத்தில் இடம்பெறாமலும் போகலாம்.

ஏன் தமிழக அரசின் ஊர்தி நிராகரிக்கப்பட்டிருக்கிறது?

இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கான Theme-மாக கொடுக்கப்பட்டது, இந்தியாவின் 75 ஆண்டுக்கால சுதந்திர வரலாறு. எனவே, ஒவ்வொரு மாநிலமும் இந்தியாவின் 75 ஆண்டுக்கால சுதந்திரத்தைப் போற்றும் வகையில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகளைத் தயார் செய்ய வேண்டும்.

  • அதன்படி தமிழ்நாடு அரசு, `சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம்' என்ற தலைப்பில், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்களுடன்கூடிய அலங்கார ஊர்தியைப் பரிந்துரைத்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  • மூன்று முறை தமிழக அதிகாரிகள், மத்திய அரசின் நிபுணர் குழு முன்பு இந்த ஊர்தி குறித்து விளக்கம் அளித்துள்ளனர். மொத்தம் 7 மாதிரிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இருந்தும், தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதை மறுபரிசீலனை செய்யக்கோரி, நேற்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

  • ஏன் தமிழக அரசின் மாதிரிகளை நிராகரித்தனர் என்பதற்கான காரணங்களை மத்திய அரசு இதுவரை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், மிகவும் பிரபலமான சுதந்திரப்போராட்ட வீரர்களை மத்திய அரசு அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகவும், வ.உ.சி, வேலுநாச்சியார் போன்றவர்களை வெளிநாட்டினருக்குத் தெரியாது என அதிகாரிகள் சொன்னதாகவும் நேற்று செய்திகள் வெளியாயின.

தமிழகத்தின் வாகனம் மட்டும்தான் நிராகரிப்பட்டுள்ளதா?

இல்லை. ஶ்ரீ நாராயணகுருவின் படம் இடம்பெற்றிருந்த கேரளாவின் ஊர்தி, சுபாஷ் சந்திரபோஸ் படம் இடம்பெற்றிருந்த மேற்கு வங்கத்தின் ஊர்தி ஆகியவையும் நிராகரிக்கப் பட்டுள்ளன. இந்த ஆண்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சார்பிலிருந்து 12 ஊர்திகளும், மத்திய அமைச்சகங்களிலிருந்து 9 ஊர்திகளுமாக, மொத்தம் 21 ஊர்திகள் மட்டுமே பங்கேற்கும் எனத் தெரிகிறது. (பரிந்துரைக்கு சென்றவை 56)

  • தமிழகம் போலவே கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலும், அந்தந்த மாநில வரலாற்றுத் தலைவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

  • இந்நிலையில், நேற்று இரவு மத்திய அரசின் சார்பிலிருந்து, அதிகாரபூர்வமாக இல்லாமல் எந்தவித அதிகாரிகளின் பெயர்களும் இல்லாமல், செய்தியாளர்களுக்கு ஒரு விளக்கம் அனுப்பப்பட்டுள்ளது.

பெயரில்லா அறிக்கை
பெயரில்லா அறிக்கை
  • அதில், மாநிலங்களின் ஊர்திகள் நிராகரிக்கப்படுவதற்கும், அந்தந்த மாநில சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும், முறையான பரிசீலனைக்குப் பிறகே இவை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முந்தைய ஆண்டுகளில் கேரளா, தமிழகம், மேற்கு வங்கத்தின் மாதிரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள மாநில முதல்வர்களையும் விமர்சித்திருக்கிறது அந்தப் பெயரில்லா அறிக்கை!

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism